அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஒன் சைடு லவ்வைச் சொல்லும் ‘இதயம் முரளி’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘டான் பிக்சர்ஸ் ‘ தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஆகாஷ் பாஸ்கரன், டைரக்டராக வும் களமிறங்கியுள்ள படம் ‘இதயம் முரளி’. அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ஏஞ்சலின் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாடெங்கும் இன்பன் உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் ரிலீஸ் பண்ணுகிறது.ஜூலை 10-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவதால் சென்னை அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் புரமோ நிகழ்ச்சி நடந்தது. இதில் டைரக்டர் அட்லீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் சிலரின் பேச்சு……

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

“ஆகாஷ் இந்தக் கதையை 2018-ஆம் ஆண்டிலேயே என்னிடம் கூறினார். அப்போது அவர் ஒரு இளம் படைப்பாளிக்கான கனவுகளோடு இருந்தார். பொதுவாக சினிமா வட்டாரத்தில், பணம் இருப்பவர்களால் மட்டுமே படம் எடுக்க முடியும்; அம்பானி போன்றவர்களுக்குத்தான் அது சாத்தியம் என்று பேசுவோம். ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது பணம் மட்டுமல்ல. ஏராளமான தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு திட்டத்தை முழுமையாக உருவாக்குவது மிகப் பெரிய சவாலான வேலை.

யாவரும் கேளீர்

அந்தப் பயணத்திற்காக ஆகாஷ் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு ஆண்டும் என்னைச் சந்தித்து, ஸ்கிரிப்ட்டில் இதைச் சேர்த்திருக்கிறோம், அதை மேம்படுத்தியிருக்கிறோம் என்று உற்சாகமாகப் பகிர்ந்து கொள்வார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பு நிலைக்கு வந்து, இன்று அவரது மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது. இந்தப் படம் காட்சியமைப்பு, இசை மட்டுமல்லாமல், ஆழமான உணர்வுகளையும் கொண்ட ஒரு படம்”.

தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார்

“நீண்ட காலத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான அழகிய காதல் படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மக்கள் நிச்சயம் ரசித்து வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும்”.

ஹீரோ அதர்வா

“கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தின் பயணம் மிகவும் அழகாக அமைந்தது. இளம் தலைமுறையினரின் ஆற்றலுடன் கூடிய ஒரு அருமையான குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. தயாரிப்பாளராக ஆகாஷ் ஏற்கனவே பல படங்களை வழங்கியிருந்தாலும், இயக்குநராக அவர் உருவாக்கிய முதல் படம் என்பதால் இது அவருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நான் இருந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் படத்தில் உள்ளது அதற்கு காரணம் ஆகாஷ் தான்.

இது அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு மனநிறைவு தரும் படமாக உருவாகியுள்ளது”.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இயக்குநர் அட்லீ

“ஆகாஷ் பாஸ்கரன் எனக்கு தம்பி போன்றவர். எனக்காக அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கதையை நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதியில் அவரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவர் செய்திருக்கும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.

அதர்வாவின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன்.இந்தப் படம் அவருக்கு  மிக முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

படத்தில் நடித்துள்ள  அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள்.

ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்”.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்

“இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றி.

காதலைக் கொண்டாடும் ஒரு அழகான படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எங்கள் படத்திற்குத் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி”.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.