அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“தவெக தூய சக்தி அல்ல, தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி” – டிடிவி தினகரன் அதிரடி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை கோச்சடை தனியார் விடுதியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்தித்தபோது…

அதிமுகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு …..

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அமமுக தனிக்கட்சி அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம். அவங்களோடதான் இருக்கிறோம் அவர்களோடு பயணிக்கிறோம்.

கரூரில் முதலமைச்சர் விஜயின் பேச்சு குறித்த கேள்விக்கு …

யாவரும் கேளீர்

இப்போது அவர் தானே காவல்துறைக்கு அமைச்சர் அன்று போலீசு தவறு செய்ததாக சொல்பவர் ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.  முதலமைச்சர் சொல்வது உண்மையா என்பதை சிபிஐ விசாரிக்கிறது உண்மை வெளிப்படும். இப்போது பழியை யார்மீதோ போடுவது சரியாக இருக்காது. யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கிறார்கள். விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார். கரூரில் அவருடைய பேச்சில், உடல்மொழியில் எந்த துக்கமும் தெரியவில்லை. அவர் சினிமா கிளைமாக்சில் பேசுவது போல பேசி கொண்டிருக்கிறார். வாழ்வு வந்துவிட்டது என்பதற்காக அர்த்த ராத்திரியில் குடைபிடிக்க வேண்டாம். விஜய் பேச்சில் அகங்காரம், ஆணவம் மட்டும் தான் தெரிகிறது.

அதிமுகவினர் தவெக.,வில் இணைவது குறித்த கேள்விக்கு …

விஜய்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட ஆதரவு அளித்த கட்சிகள் மேல் நம்பிக்கை இல்லை அதனால்தான் அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்து தன்கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதிமுக உறுப்பினர்களுக்கு ஏதோ ஒரு Consideration செய்துள்ளார்கள். அதை தான் குதிரை பேரம் என்கிறோம். இன்னொரு கட்சியில் வென்றவர்களை தங்கள் கட்சியில் சேர்த்து வைத்திருப்பதும் ஊழல்தான் அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்ததும் ஊழலில் தான் சேரும் தவெக தூய சக்தி அல்ல தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தமிழ்நாட்டை காக்கவந்த தேவதூதர் அவதார புருஷர் போல பேசுகிறார் விஜய். ஆனால் விவசாய கடன் ரத்து விவகாரத்தில் ஏமாற்று வேலையை செய்தார்கள் எதிர்க்கட்சிகளை சுரண்டாமல் மக்கள் பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்.

திமுக, அதிமுகவை கூட்டுகளவாணிகள் என முதல்வர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு …

ஒரு முதல்வர் பேசும் பேச்சா இது உண்மையில் விஜய் தான் களவாணிஆடு திருடன், மாடு திருடன் மாதிரி எம்.எல்.ஏ.திருடர் நீங்கள் எம்.எல்.ஏ களவாணி நீங்கள் ‘Reel less work more’ என செயல்பட வேண்டும்.

தவெக – திமுக ஒரே அணியில் இருக்க வேண்டும் என்ற திருமாவின் கருத்துக்கு …

பாஜகவை எதிர்ப்பதற்காக திமுக தவெக ஒரே அணியில் இருக்க வேண்டும் என்கிறார் திருமா. அதே போல் தான் திமுக அதிமுக கூட்டணி அமைக்கலாம். இது ஒரு political situation அடிப்படையிலானது உங்களை எதிர்த்து வென்ற கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி அமைப்பது சரி என்றால் எந்த கூட்டணியும் சரிதான் விஜயகாந்துடன் விஜயை ஒப்பிடாதீர்கள். விஜயகாந்த் வெளியில் நடிக்க மாட்டார், சினிமாவில் மட்டும் தான் நடிப்பார் கரூரில் முதல்வர் பேச்சில் துக்கம் தெரியவில்லை ஆணவம் மட்டுமே தெரிந்தது.

ஆட்சிக்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதல்வருக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சிகளை சுரண்டுவதும் ஊழல்தான். ஆடு திருடுவது போல எம்.எல்.ஏ.,திருடுகிறார்கள் முதல்வர்தான் ஒரிஜினல் களவாணி என்றார்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.