TR ரமேஷ் முகமூடியை ஆதாரத்துடன் கிழித்த பழனி முருகன் !
டி.ஆர்.ரமேஷ் என்பவரால் எக்ஸ் தளத்தில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு கொடைக்கானலை சேர்ந்த திரு.வி.என்.ஏ.எஸ்.சந்திரன் என்பவரால் ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் 2003 மார்ச் மாதத்தில் உயிலாக எழுதப்பட்டு மேற்படி சொத்துக்கள் பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தீய உள்நோக்கத்துடன் கோடான கோடி இந்து பக்தர்களை ஏமாற்றும் வகையில் பதிவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் நகரை சேர்ந்த திரு.வி.என்.ஏ.எஸ்.சந்திரன் என்பவரால் 24.03.2003 தேதியில் உயில் சாசன ஆவண எண்.08/2003 மூலம் இத்திருக்கோயிலுக்கு சொத்துக்கள் சில மட்டும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேற்படி உயில் சாசனம் அவரது காலத்திற்கு பின்பு தான் நடைமுறைக்கு வரும். தற்போது திரு.வி.என்.ஏ.எஸ்.சந்திரன் அவர்கள் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.

மேற்படி நிலங்கள் தொடர்பாக தவறான செய்தி திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக பரப்பப்பட்டு வருகிறது. எனவே பொது மக்களும், முருக பக்தர்களும் இச்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம். திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக அவதூறு செய்தியை பரப்பியதற்காக திரு.டி.ஆர்.ரமேஷ் என்பவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அவரது காலத்திற்கு பின்பு தான் திரு.வி.என்.ஏ.எஸ்.சந்திரன் அவர்கள்
அதில் “எனது ஆயுட்காலத்திற்கு பின்பு அடியிற்கண்ட சொத்துக்களில் 1 முதல் 4 லக்க சொத்துக்களை பூராவும், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சேர வேண்டியது. மேலும் என்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் மூலம் வரக்கூடிய சொத்துக்களும், இதில் சொல்லப்படாமல் விடுபட்டுபோன சொத்துகளும்.இந்த உயிலில் அடங்கும். அவைகளும் எனது இறப்பிற்கு பிறகு பழனி ஸ்ரீ தண்டாயுதபாணிசுவாமிக்கு சர்வ சுதந்திர பாத்தியமாய் சேர வேண்டியது. மேலும் என் இறப்பின்போது நிலுவையில் இருக்கும் வழக்குகள் மற்றும் நடவடிக்கைகள் யாவையும் மேற்படி ஸ்ரீ பழனி தண்டாயுதபாணி சுவாமியே மேல் நடத்தி வந்து அதன் பலனை அடைந்துகொள்ள வேண்டியது.
அதன் படி கீழ்கண்ட சொத்துக்களைப் பாவித்து மேற்படி உயில் ஆவனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சொத்து விவரம்
- பழனி ஸ்ரீ தண்டாயுதபாணிசுவாமி அடைந்துகொள்ள வேண்டிய சொத்து
- Kodaikanal Taluk, Kodaikanal Town, Land at Old S.F.No. 231 with an extent of 50 cents.
- V.N.A.S.Chantran & Co. (90% share)
- a) Kodaikanal Taluk, Kodaikanal Town, Land and Buldings at Old S.F.No. 372 with an extent of 82 cents.
- b) Kodaikanal Taluk, Kodaikanal Town, Land and Buldings at Old S.F.No. 372 with an extent of 65 cents.
- Coimbatore District, Sowripalayam, Land and Buldings atS.F.No.47/2, 45 and 46 of 1.55 Acres.
- Tea Factories:
Two Tea Factories, one known as Sri Murugan Tea Factory situated at Valparai in Coimbatore District and the other by name Talayar Tea Factory situated at Munnar, Kerala. (மேலும் இந்த உயிலில் சொல்லப்படாமல் விடுபட்டு போன சொத்துக்களும் சேர்ந்து இதில் அடங்கும்.)
இந்நிலையில் மேற்படி நபர் தான் எழுதி வைத்த உயில் சாசனத்தை 23.07.2003 அன்று ஆவண எண்.16/2003-படி மீண்டும் உயில் சாசன ரத்துப் பத்திரம் எழுதி பதிவு செய்துள்ளார். எனவே மேற்படி திரு.வி.என்.எஸ்.சந்திரன் என்பவரால் இத்திருக்கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட உயில் சாசனம் நடைமுறைக்கு வரவில்லை என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.