அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கரப்பான் பூச்சி கட்சியின் தலைவராகிறார் நடிகர் விஷால்?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சென்னை யில் நேற்று (ஆக.07) இரவு நடந்த ‘மகுடம்’ படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தின் ஹீரோ& டைரக்டர் விஷால் பேசியது….

“இந்தப்படத்தைக்  கொடுத்த ஆர்.பி செளத்ரி சாருக்கு நன்றி. அவர் நிறைய நம்பிக்கையைக் கொடுத்தார். மேலும் 14  மாதங்கள் படம் நடிக்காமல் மிகுந்த சிரமத்தில் இருந்த போது எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை உடன் நின்றிருக்கிறார் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. வேற யாராவது இருந்தால் பிச்சிக்கிட்டு ஓடிருப்பாங்க. திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் எனக்கு கொடுத்த ஊக்கமும், என்மேல் வைத்த  நம்பிக்கை யும்  வீண்போகக்கூடாது என்பதற்காக அதிகமாக உழைத்தேன். அவர் கொடுத்த ப்ளாட்பார்ம் தான் இந்த மகுடம் படத்தை வெற்றிப்படமாக மாற்றப்போகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

மகுடம்படத்தில் நடித்த என்னுடைய சக நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும். இது எனக்கு சவாலான படம். கேமராவிற்கு முன்னாடியும் பின்னாடியும் வேலை நிறைய இருந்தது. என் சக கலைஞர்கள், நடிகர்கள்  இவன் ஏன் நடிக்கச் சொல்லித் தர்றான், இவன் ஏன் இசையில் தலையிடுறான், இவன் ஏன் ஸ்டண்ட்டுக்கு வந்து ஐடியா சொல்றான், என்று யாரும் என்னைச் சொல்லவில்லை.  ஈகோ இல்லாத இந்த நண்பர்கள் இல்லை என்றால் இந்த மகுடம் படம் இல்லை. இயக்குநராக வேண்டும் என்பது என் 35 வருட கனவு. அர்ஜுன் சாரிடம் என்னை உதவிய இயக்குநராக சேர்ப்பதற்கு நான்குமணி நேரம் என் அப்பா காத்திருந்தார். என்னை ஊக்கப்படுத்தி இன்று என் கனவை நிறைவேற்றி வைத்த அப்பாவிற்கு   நான் கடமைப்பட்டிருக்கேன்.

அதேபோல் சண்டைக்கோழி படம் வரக்காரணம் என் அம்மா தான். என் அப்பாவிடம் நீங்க செலவு பண்ணலன்னா நான் செலவு பண்றேன் என்று சொல்லி சண்டக்கோழி படத்தில் நடிக்க வைத்தார். அப்பா அம்மா இருவருமே என் கரியரில் எனக்கு ரொம்ப முக்கியம். ஆர்.பி செளத்ரி சார் அறிமுகப்படுத்திய 45-ஆவது புதுமுக இயக்குநர் நான். சூப்பர் குட் பிலிம்ஸின் 99-ஆவது படம் இது. இந்த இடத்தில் என் குருநாதர் ஆக்சன் கிங் அர்ஜுன் சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவரிடம் நான் இயக்குநராக நிறைய கத்துக்கிட்டேன். ராம்கோபால்வர்மாவோட உதயம் படம் பார்த்து நான் இயக்குநராகணும்னு நினைச்சேன். இன்றைக்கு அது நனவாகியிருக்கு. நம் கனவுகளில் நாம் கான்பிடன்டாக இருந்தால் நிச்சயமாக அது நிறைவேறும். அது எனக்கு மட்டுமல்ல,  சினிமாத்துறைக்கு மட்டுமல்ல. எல்லாத்துறைக்கும் நான் சொல்வது பொருந்தும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மகுடம்ஜி.வி. பிரகாஷ்  ஆர். ஆர் வாசிச்சுக்கிட்டிருக்கார்  அதான் இங்க வரல. ஜி.வி என்ற இசையமைப்பாளர் புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு வரம். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவர் இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

இந்தப்படத்திலுள்ள க்ளைமாக்ஸ் காட்சி வேறு எந்தப்படத்திலும் வந்ததில்லை. படம் கடைசி எட்டுநிமிடம் மேஜிக் செய்யும்.

மீடியாவிற்கு ரொம்ப நன்றி.

படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கிறது. அதைத்தாண்டி படம் வெளிவரும். ஆகஸ்ட் 16-ஆம் தேதி மகுடம் வெற்றிவிழாவில் சந்திக்கிறேன். அப்போது மிகவும் முக்கியமான அறிவிப்பு வரும். தமிழ்நாடே அதிரும்” என அதிரடியாக பேசினார் விஷால்.            “இந்தியா முழுவதும் மாநில ஒருங்கிணைப்பாளர் களையும் தலைவர்களையும் நியமிக்கப் போவதாகவும் நான்கு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் கரப்பான் பூச்சி கட்சியின் (சி.ஜே.பி.) தலைவர் அபிஜித் திப்கே. இதையும் விஷாலின் பேச்சையும் முடிச்சுப் போட்டு பார்வையில் ‘சி.ஜே.பி.’ யின் தமிழ்நாடு தலைவராக களத்தில் இறங்கப் போகிறார் விஷால்” என்கிறார்கள் கோலிவுட்டில்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.