“ஓடிடிக்கள் அட்டகாசம்! ஹீரோக்கள் எல்லொரும் வேஸ்ட்”
‘மனிதம்’ என்ற படத்தைத் தயாரித்தவரும் பிரபல வினியோகஸ்தருமான கிஷோர் ஆதித்யா என்பவர், இப்போது மைம்கோபி கதையின் நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார். சினிமா தயாரிப்புடன் இப்போது ‘யுவர் பேக்கர்ஸ் ப்ளே’ [ Your backers Play] என்ற இலவச ஓடிடி தளத்தையும் தொடங்கியிருக்கிறார். சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஆக.22-ஆம் தேதி நடந்த இந்த ஓடிடியின் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் எஸ்.வீ.சேகர், யூகிசேது, மைம் கோபி ஆகியோர் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கிஷோர் ஆதித்யா பேசும் போது, “சின்னப் படங்களையும் மக்கள் ஓடிடியில் மக்கள் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன். இதில் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் இல்லை, இலவசம் தான். அடுத்த கட்டமாக ஏஐ டெக்னாலஜி மூலம் சினிமாக்களைத் தயாரிக்கவுள்ளோம். சின்ன பட்ஜெட் படங்களுக்கு எங்களின் இந்த ஓடிடி பிளாட்பார்ம் பெரிய சப்போர்ட்டாக இருக்கும்” என்றார்.
ஆர்.கே.செல்வமணி, “ஓடிடி வந்த புதிதில் போட்டி போட்டு சினிமாக்களை வாங்கினார்கள். ஆனா இப்ப அவர்களிடம் தயாரிப்பாளர்கள் கெஞ்ச வேண்டிய நிலை. ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளரோ, ஹீரோக்களோ முடிவு பண்ண முடியாது. ஓடிடிகாரன் தான் முடிவு பண்றான். ஹீரோக்களெல்லாம் வேஸ்ட். இப்படிப்பட்ட நிலையில் இந்த இலவச ஓடிடியை கிஷோர் ஆதித்யா தொடங்குவதில் மகிழ்ச்சி. நான் இங்க வர்றதுக்கு முக்கியக் காரணம், இதில் வரும் லாபத்தில் 20% ஐ சினிமாத் தொழிலாளர்களுக்குத் தர்றேன்னு கிஷோர் சொன்னதால் தான். நல்ல படங்களை வாங்கி வெளியிடுங்கள், உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு”.

எஸ்.வீ.சேகர், “இலவசம்கிறதுக்காக நீங்கள் கொடுக்கும் எல்லா கண்டெண்டையும் மக்கள் பார்க்கமாட்டார்கள். அதனால் பெஸ்ட் கண்டெண்டைப் பார்த்து வாங்கி வெளியிடுங்கள், முன்னணி ஓடிடி நிறுவனங்கள் மட்டும் கோலோச்சுவதைக் கண்ட்ரோல் பண்ணலாம்’.
நடிகர்கள் யூகி சேதுவும் மைம் கோபியும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.