தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்ற நிர்வாகிகள் தேர்வு
திருச்சி தில்லைநகரில் 30-08-2026 ஞாயிறன்று நாட்டுப்புற/ நாடகக்கலைஞர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாநில சங்க கௌரவ தலைவர் தஞ்சாவூர் துரை.கோவிந்தராஜ் தலைமையேற்க மாநில தலைவர் கலைமாமணி வளப்பக்குடி வீரசங்கர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாக அமைப்பு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. தலைவராக பொன்.குகன்ராஜ், கௌரவ தலைவராக ஆர்.பழனிச்சாமி, துணைத்தலைவராக எஸ்.கருணாகரன், செயலாளராக V.முருகன் என்கிற பூவாசம் ரவி , துணை செயலாளராக எல்.ஆர்.சுகந்தி , பொருளாளராக எஸ்.குமார், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
எட்டரை பரசுராஜ், அரியலூர் மாவட்ட செயலாளர் கி.மூர்த்தி, நாடக நடிகை கலா மற்றும் பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு சிறப்பு கவனம் கொண்டு எங்கள் சங்க கோரிக்கைகளை ஏற்று பல சலுகைகளை அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் ஜோசப்விஜய் அவர்களுக்கும் தமிழ்வளர்ச்சி மற்றும் கலைப்பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்ற அனைத்து கலைஞர்கள் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.