நிலுவை வழக்குகளுக்கு உடனடி தீர்வு! திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு!
திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திரு கிறிஸ்டோபர் அவர்கள் கூறுகையில்,
மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்றறிக்கையின்படி 12/9/2026 அன்று இந்தியா முழுவதும் நடக்கவிருக்கும் national lok adalat நிகழ்ச்சியில் வழக்காடிகளின் நீண்ட நாள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காசோலை வழக்கு, மோட்டார் வாகனம் விபத்து வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு, சிவில் வழக்கு சமாதானமாக கூடிய கிரிமினல் வழக்கு ஆகிய வழக்குகளை வழக்கறிஞர்களுடன் சேர்ந்து சமரசமாக முடிப்பதால் நீதிமன்றத்தை நாடிவரும் மக்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்பதால் நடக்கவிருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றம் ( தேசிய மகா லோக் அதாலத்) முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் நீதிபதி குறிப்பிடுகையில் இங்கு முடித்து வைக்கும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்பது ஒரு சிறப்பு அம்சம் ஆகும் எனக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதிபதி பிரபு, குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க செயலாளர் R.ஆரோக்கியசாமி, குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் V.வெங்கட் ஆகியோர் உடன் இருந்தனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.