கோர விபத்து – அக்காள், தங்கைகள் உட்பட 4 மாணவிகள் பலியான சோகம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்செங்கோடு அருகே சக்கராம்பாளையம் பிரிவு சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குச் சென்றிருந்த தனது தங்கைகள் நிவேதிதா (16), தனுஸ்ரீ (13) ஆகியோரை அழைத்துக்கொண்டு அக்காள் சுபிதா கலைச்செல்வி (19) மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களுடன் உறவினரின் மகளான அபிநயா (12) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்துடன் மொபட் எதிர்பாராத விதமாக மோதியதில், சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காள்–தங்கைகள் 3 பேரும், உறவினரான சிறுமி ஒருவரும் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.