ஆசிரியர் தினத்திலாவது அறிவிப்பு வெளியாகுமா? ஏக்கத்தில் தற்காலிக ஆசிரியர்கள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்திலாவது, 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற 11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பு வெளியாகுமா? என்று கேள்வி எழுப்புகிறார், தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் , “தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி பாடங்களில்  தற்போது ரூ. 15 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிகின்றார்கள். தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

16 கல்வியாண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வருகிறது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் தற்காலிகமாக பணிபுரிகின்ற ஆசிரியர்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்து உள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்

பகுதிநேர ஆசிரியர்களை பொறுத்தவரை 5 ஆண்டுகளை கடந்து 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் அனுப்பி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள்.

முதல்வர் 110 விதியில் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பகுதிநேர ஆசிரியர்களின் 16 ஆண்டு கல்விப்பணியை அங்கீகரித்து நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.