அங்குசம் பார்வையில் ‘பாரிஸ் கஃபே’
கணவன் -மனைவிக்கிடயே ஈகோ மோதல், சந்தேக யுத்தம் வந்து பிரிவார்கள். பிள்ளைகள் வளர்ந்த பின் இருவரிடமும் பேசி சேர்த்து வைப்பார்கள். இல்லேன்னா சேரவே மாட்டார்கள். இதான் வழக்கமான தமிழ் சினிமாக் கதை. ஆனால் இந்த பாரிஸ் கஃபேவில் வேறு கதையை வேறு கோணத்தில் யோசித்து நல்லவிதமாகவே எடுத்துள்ளார் டைரக்டர் சாரஜ் சீலன்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் படித்து முடித்ததுமே அர்ச்சனா குமாருக்கு வேலை கிடைக்கிறது. இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அப்பா குரு சோமசுந்தரத்தைத் தொடர்பு கொள்ளும் போது, அவர் தனது அம்மா அனு மோலுடன் வசிக்கவில்லை என்பது தெரிகிறது. அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைக்க அமெரிக்காவிலிருந்து தனது பாய்ஃப்ரண்ட் விஜய் விஷ்வாவுடன் கிளம்பி சென்னைக்கு வருகிறார்.
காதல் ஜோடிகளான சாய் விக்கி—நயனா சாய் இருவரும் செத்துக்கிடக்கிறார்கள். அந்த பிணங்களை போஸ்ட்மார்டம் செய்யும் டாக்டர் குரு சோமசுந்தரத்திற்கு இது தற்கொலை அல்ல, கொலை தான் என உறுதியாக தெரிகிறது. ஆனால் போலீஸ் உயர் அதிகாரியின் மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை தான் என எழுதிக் கையெழுத்துப் போடுகிறார் குரு சோமசுந்தரம். இது பெரியாரிஸ்டான அவரின் மனைவி அனுமோலுக்குப் பிடிக்காமல் அவரைவிட்டு விலகிச் செல்கிறார். இதான் இவர்களின் பிரிவுக்குக் காரணம்.
அதன் பின் அர்ச்சனாவின் முயற்சியால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தற்கொலை வழக்கை ரீ ஓப்பன் பண்ண கோர்ட்டில் மனு போடுகிறார் அனு மோல். குரு சோமசுந்தரமும் களத்தில் இறங்குகிறார். ஒரு கான்ஃபிரன்ஸுக்காக குரு சோமசுந்தரம் பாரிஸுக்குப் போன போது அங்கிருக்கும் கஃபேவில் இந்த ஜோடிகளின் போட்டோவைப் பார்த்த பிறகு கதையில் லைட் ஸ்பீடு ஆரம்பித்து போகப் போக நார்மலான ஸ்பீடில் பயணித்து சுபமாக முடிகிறது.
குரு சோமசுந்தரம் தான் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் என்பதை பல சீன்களில் நிரூபித்துள்ளார். குறிப்பாக அனுமோல் ஆவேசமாகும் போது, நீ என்னோட பெஸ்ட் கம்பேனியன், நீ என்னைப் புரிஞ்சிக்கலேன்னா எப்படி?” என ஏக்கமாகப் பேசுவது, உயர் போலீஸ் அதிகாரியின் காலில் துப்பாக்கியால சுட்டுவிட்டு மகளையும் மருமகனையும் காப்பாற்றுவது, க்ளைமாக்ஸில் அனுமோல் மற்றும் அர்ச்சனாவுடன் பாசப்பிணைப்ப்பு என குரு சோமசுந்தரம் செம ஜோர்.
சில காட்சிகளில் அழகாகவும் சில காட்சிகளில் டல்லாகவும் தெரிகிறார் அனுமோல். ஆனால் நடிப்பில் செம பிரைட். யூடிப்பில் அட்டகாசம் பண்ணும் அர்ச்சனா குமார், இதில் சூப்பர் பியூட்டியாகவும் இருக்கிறார், நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். சாய் விக்கி-நயனா சாய் எபிசோட் தான் படத்திற்கு ஆதாரம். அதையும் கரெக்டா எக்ஸ்கியூட் பண்ணியிருக்கிறார் டைரக்டர் சாரஜ் சீலன். பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், சேகுவேரா போன்ற மாபெரும் தலைவர்கள் படத்தில் இருக்கிறார்கள்.
அங்குசம் பார்வையில் ‘பாரிஸ் கஃபே’ 45/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.