அங்குசம் பார்வையில் ‘டார்க் ஹெவன்’ 

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நெல்லை மாவட்டம் மேக்கரை கிராமத்தில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் ஆண்கள் மட்டும் கொலை செய்யப்படுகிறார்கள். இதை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர்கள் பலர் பயந்து ஓடிய நிலையில் மேக்கரைக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர் சித்து. இவரின் மனைவி தர்ஷிகா, ஒரு பெண் குழந்தை. ஜூன் மாசம் மட்டும் ஏன் கொலைகள் நடக்குது? கொலையாளி யார்? பச்சைபசேல் எனசொர்க்கம் போல இருக்கும் மேக்கரை கிராமம் ‘டார்க் ஹெவன்’ ஆனது எப்படி?

படத்தின் ஓப்பனிங் சீனே நல்ல மழை, இருட்டு. நூலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் பழைய பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் கடைக்குச் செல்கிறார். அங்கே ‘டார்க் ஹெவன்’ என்ற ரொம்ப பழசான புத்தகத்தைப் பார்க்கிறார். அதைப் புரட்டும் போது, அந்த வருடத்தில் என்னென்ன அசம்பாவிதங்கள் நடக்கும் என எழுதப்பட்டுள்ளது. இது 1979-ல் முதல்வராக இருக்கும் பெண்ணுக்கு ஆபத்து வரும் என அதில் உள்ளது. அதே போல் பல வருடங்கள், பல சம்பவங்கள் நடக்கிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மேக்கரை கிராமத்தில் இருக்கிறால் வனமங்கை. அதே ஊரில் இருக்கும் ஜோசியன் ஒருவனின் நயகவஞ்சகத்தால் கொல்லப்படுகிறால் வனமங்கை. இதனால் ஆத்திரமாகும் வனமங்கையின் ஆவி அந்த ஊர் ஆன்களை சாகடிக்கிறது. இப்படி ஒரு கதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாக இன்ஸ்பெக்டர் சித்துவிடம் சொல்கிறார் கான்ஸ்டபிள். அப்படிப்பட்ட ஜூன் மாதத்தில் தான் ரித்திகாவின் கணவராக இருந்த இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறார் கான்ஸ்டபிள்.

ஆனால் இந்தக் கொலைகள் எல்லாமே இப்போதிருக்கும் சைக்கோ கொலைகாரனால் தான் நடக்கிறது என்ற சந்தேகம் வருகிறது. அவன் யார்? எதற்காக இந்தக் கொலைகளைச் செய்கிறான்? என சித்து விசாரிக்கும் சீன்கள் எல்லாமே மிக அருமை. சித்துவின் மேனரிசம் ஓகே. அதுக்காக படம் முழுக்க முரைச்சுக்கிட்டே வரணுமா என்ன? இடைவேளை வரை படம் கரெக்டான லைன்ல போகுது. இடைவேளை விடும் நேரம் வயலின் கொலைகாரன் எண்ட்ரியாகிறான். பல நூறு வருசத்துக்கு முன்னால் வாழ்ந்த வனமங்கைக்கும் வயலினுக்கும் என்னய்யா சம்பந்தம்? னு நினைச்சுக்கிட்டே டீ சாப்பிட்டுட்டு உள்ளே போனோம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதுக்குப் பிறகு கதை வேற ரூட்ல போய் செத்துப் போன இன்ஸ்பெக்டரின் மனைவி ரித்விகாவுக்கு ஒரு பேட் ஃப்ளாஷ்பேக் வச்சி, லைட்டா டைவர்ட்டாகி, க்ளைமாக்ஸை கச்சிதமாக முடிச்சிருக்கார் டைரக்டர் பாலாஜி.

சர்ச் ஃபாதராக அருள் டி.சங்கர், டாக்டராக நிழல்கள் ரவி, நாட்டமையாக வரும் வேல ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டராக வரும் ஜெயக்குமார் என அனைவருமே கதைக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். இரவு நேரக்காட்சிகளில் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளார் கேமராமேன் மணிகண்டன். பின்னனி இசையில் டார்க் ஹெவனுக்கு மேலும் திகில் கூட்டியுள்ளார் மியூசிக் டைரக்டர் பாலாஜி சக்தி.

இதுவரை வெளிவந்த க்ரைம்-த்ரில்லர் படங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது இந்த ‘டார்க் ஹெவன்’.

அங்குசம் பார்வையில் ‘டார்க் ஹெவன்’  54/100

 

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.