பள்ளி மாணவ, மாணவியருக்கான திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
2026ன் விதிகளின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு குறித்த விழிப்புணர்வு.
ஸ்ரீரங்கம் நேருஜி பள்ளி ,வேதாத்திரி நகரில் உள்ள சந்தனம் வித்தியாலயா ஆகிய பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் டாக்டர் மா. கார்த்திகேயன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திடக்க ழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி குப்பைகளை வீடுகளிலேயே நான்குவகை களாக தரம் பிரித்து மாநகராட்சியிடம் ஒப்படைக்கவும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் அறிவுறுத்தினார். வீடுகளி லும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உருவாகும் ஆதாரங்கள் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை மற்றும் டெங்கு நோய் குறித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.