அங்குசம் பார்வையில் ‘நல்ல படம்’

ஏ.ஹரிஷ், தனலட்சுமி, கிருத்திகா, கல்கி ராஜா, நான் கடவுள் ராஜேந்திரன், ரமா உட்பட இன்னும் சிலர் நடித்துள்ளனர். இடைவேளை வரை குடித்துக் கொண்டே இருக்கிறார் ஹீரோ ஹரிஷ். இடைவேளைக்குப் பிறகு இந்தியா முழுவதும் மதுவிலக்கு[??] அமல்படுத்தப்படுவதால், குடியை நிறுத்திவிட்டு திருந்தி வாழ்கிறார் ஹரிஷ். இதான் இந்த நல்ல கருத்துள்ள  படம்.

ஆனால் உப்புமாப் படத்தைவிட படுகேவலமா எடுத்து வச்சிருக்காய்ங்க. அதிலும் ஹரிஷ் நடிப்பை சகிக்க முடியல. அதைவிடக் கொடுமை, ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஒரு டூயட் வச்சுருக்காய்ங்க பாருங்க… அடே விட்ருங்கடா எங்ளைன்னு கதறுவிட்டுட்டாய்ங்க.

‘நல்ல படம்’னு போஸ்டரைப் பார்த்துட்டு, உங்க ஊர்ப்பக்கம் ஏதாவது ஒரு டப்பா தியேட்டர்ல [ அதுலகூட ரீலீஸ் பண்ணிருக்கமாட்டாய்ங்க] ஒரு ஷோ ஓடுதுன்னு தெரிஞ்சு தியேட்டர்ப்பக்கம் போயிராதீக மக்களே….அவ்வளவு தான் நாம சொல்ல முடியும்.

அங்குசம் பார்வையில் ‘நல்ல படம்’ 01/100

—   ஆண்டவர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.