தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், ஹீரோக்கள், ஹீரோயின்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஹீரோக்களுக்கும் தமிழ்நாட்டில் பி.ஆர்.ஓ.வாக இருப்பவர் 39 வயது யுவராஜ். கடந்த இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட சினிமாக்களுக்கு பி.ஆர்.ஓவாக இருந்து நிகழ்ச்சிகளையும் பிரஸ் ஷோக்களையும் வெகு சிறப்பாக நடத்தியுள்ளார்.
வரும் 25-ஆம் தேதி ரிலீசாகும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘அன்பில் அவன்’, அக்.01-ஆம் தேதி ரிலீசாகும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’, அக்.02-ல் நெட்ஃபிளிக்ஸில் மட்டும் ரிலீசாகும் அர்ஜுன் தாஸின் ‘லவ்’, அதே அக்.02-ல் தியேட்டர்களில் ரிலீசாகும் ஃபகத் பாஸிலின் ‘டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ படங்களுக்கும் யுவராஜ் தான் பி.ஆர்.ஓ.
சினிமா ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்டை திறமையுடனும் சுறுசுறுப்புடனும் கையாளும் யுவராஜின் ‘யுவி கம்யூனிகேஷன்’களின் நியூஸ் தான் கீழே
நியூஸ்—01 (செளந்தர்யா ரஜினிகாந்தின் ‘லவ்’)
இரண்டு ‘டேட்டிங் ஆப்’களை மையமாக வைத்து செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருக்கும் படம் ‘லவ்’. நெட்ஃபிளிக்ஸில் அக்.02 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் இப்படத்தை பாலாஜி மோகன் டைரக்ட் பண்ணியுள்ளார். அர்ஜுன் தாஸ். ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி போடும் இதன் கதையை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். இணை எழுத்தாளர்களாக ஷரதா சுப்பிரமணியன், ஸ்வேதா சக்கரவர்த்தி பணியாற்றியுள்ளனர்.
“இப்போதைய காதலின் தன்மையும் அப்ரோச்சும் மாறியிருந்தாலும் உறவுகளுக்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் மாறவில்லை” என்பதைத் தான் இந்த ‘லவ்’ பேசுகிறது” என்கிறார் டைரக்டர் பாலாஜி மோகன்.
நியூஸ்—02 (பொங்கலுக்கு ”பிக்னிக்”)
மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாராகி, 200 கோடிக்கும் மேல் வசூலித்து சூப்பர்டூப்பர் ஹிட்டான ‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களில் இணை எழுத்தாளராக இருந்த கிரண் ஜோஷி, இப்போது ‘பிக்னிக்’ படம் டைரக்டராக புரமோட் ஆகியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸுடன் இணைந்து திலீஷ் போத்தன், இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் பிரதீப் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்திலும் இந்த மூவர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
2027 ஜனவரி 14-ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகிறது ‘பிக்னிக்’.
நியூஸ்—03 (தீபாவளிக்கு பிறகு ‘ஆகாசம்லோ ஒக தாரா’)

‘லைட் பாக்ஸ் மீடியா’ பேனரில் சந்தீப் குன்னம், ரம்யா குன்னம் இணைந்து தயாரித்திருக்கும் தெலுங்குப் படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. பவன் சாதினேனி டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீபாவளி கழித்து நவம்பர் 20-ஆம் தேதி ரிலீசாகும் ‘ஏஒடி’யின் ஒளிப்பதிவு : சுஜித் சாரங், இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.