கிறிஸ்தவர்களுக்கு மானியம் ஜனவரி31 வரை விண்ணப்பிக்கலாம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சிறுபான்மையினர் நல ஆணையர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ் நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக் கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட் சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட் டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொண்டு திரும்பும் கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட் சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www. bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. விண் ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் ஜனவரி 31ம் தேதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.