அரசு அதிகாரிகளே ! பிளான் பி இருக்கா… இல்ல தூங்கப் போறீங்களா?!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வேளாண் துறை அதிகாரிகளே! ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அதிகாரிகளே! நாட்டின் முதுகெலும்பான விவசாயம் சாக்கடை அரசியலாலும், உங்கள் அலட்சியத்தாலும் சாகக் கிடக்கிறது. அமைச்சர்களுக்கு ஐடியா கொடுத்து வழிகாட்ட வேண்டிய அதிகாரிகள், நிவாரண நிதியை தூக்கி எறிந்துவிட்டு ஜாலியாகத் தூங்கப் போய்க்கொண்டிருக்கிறீர்கள்!

விவசாய நிலங்கள் தரிசாவதைத் தடுக்க உங்களிடம் என்ன ‘பிளான் பி’ (Plan B) இருக்கிறது? மாற்று ஏற்பாடு ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? வழக்கம்போல நான்கு பணக்கார விவசாயிகளைப் பிடித்து போட்டோ எடுத்து, பேப்பரில் விளம்பரம் கொடுத்து, காலத்தை ஓட்டிவிட்டு மாதக் கடைசியில் சம்பளத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டு தூங்கப் போய்விடுவீர்களா?

இந்த வார அங்குசம் வார இதழில்…

எங்களுக்கு வறட்சி நிவாரண நிதி என்ற பிச்சை வேண்டாம்! நிலங்கள் தரிசாகாமல் இருக்க என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு எப்போது உண்மையாக உழைக்கப் போகிறீர்கள்? படித்த பட்டதாரிகள் தானே நீங்கள்? “எல்லாம் அரசின் கொள்கை முடிவு” என்று வழக்கமான அதிகார வர்க்க நாடகத்தை ஆடி ஏமாற்றாதீர்கள்! வறட்சியிலும் இரத்தம் சிந்தி விவசாயம் செய்பவர்களை எப்படி ஊக்குவிக்கப் போகிறீர்கள்?

நிர்வாகச் சீர்கேடும் அதிகாரிகளின் தூக்கமும்: பகீர் உண்மைகள்!

விவசாயிகள் போராட்டம்

  1. காவிரி நீர் எங்கே? புது அய்யன் வாய்க்கால் வறண்டு கிடப்பது ஏன்?

காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டு இன்றோடு 21 நாட்கள் ஓடிவிட்டன. ஆனால், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம், சர்வே எண் 24-க்கு தண்ணீர் தரும் புது அய்யன் வாய்க்காலில் இன்றுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை! குடமுருட்டியிலிருந்து பெட்டவாய்த்தலை வரையிலான விளைநிலங்கள் பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு யார் பொறுப்பு?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

  1. 25 நாளில் முடியும் தண்ணீர்… அப்புறம் என்ன செய்யப் போறீங்க?

இன்னும் 25 நாட்களுக்குத்தான் இந்த அரைகுறை நீர்வரத்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? நடுவழியில் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா? “இந்தத் தண்ணீர் விவசாயத்திற்கு இல்லை” என்று கூச்சமே இல்லாமல் பதில் சொல்லும் அதிகாரிகளே… அப்படியென்றால் விவசாயத்திற்கு உங்கள் மாற்றுத் திட்டம் என்ன? அதிகாரிகளே பதில் சொல்லுங்கள்!

விவசாயம் செய்ய வழி என்ன? பாசனத்திற்குத் தண்ணீரே இல்லாத இந்தச் சூழலில், விவசாயி எப்படிப் பயிர் செய்ய முடியும்? தரிசு நிலமாவதைத் தடுக்க திட்டம் என்ன? விளைநிலங்கள் எல்லாம் தரிசு நிலங்களாக மாறுவதைத் தடுக்க உங்களிடம் உள்ள உடனடி நடவடிக்கை என்ன?

விவசாயிகள் போராட்டம்ஏட்டுச் சுரைக்காய் மாற்றுப் பயிரா? இந்த நெருக்கடிக்கு நீங்கள் வகுத்துள்ள மாற்றுப் பயிர் திட்டங்கள் என்ன? அல்லது எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கணக்குத்தானா?

போட்டோஷூட் நாடகம் இனி செல்லாது! வசதி படைத்த சில விவசாயிகளை வைத்து போட்டோ எடுத்து, ‘எல்லாம் சுபமே’ என்று பொய்க்கணக்கு காட்டி, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கித் தூங்கும் பழக்கத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?

இது வெறும் கோரிக்கை மனு அல்ல; மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் அதிகாரிகளின் மனசாட்சியை நோக்கி வீசப்படும் கேள்விக்கணை! வறட்சியிலும் விவசாயத்தைக் காப்பாற்ற உங்களிடம் ‘பிளான் பி’ உண்மையிலேயே இருக்கிறதா… அல்லது காகிதத்தில் மட்டும் தான் இருக்கிறதா? அலுவலக அறையை விட்டு வெளியே வந்து பதில் சொல்லுங்கள் அதிகாரிகளே!

தங்கராஜ், விமானப்படை அதிகாரி (ஓய்வு).

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.