முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்
ஆசிரியர் – இ.பா.சிந்தன்
அறிவியல் வெளியீடு.
இந்தியா உட்பட உலகளவில் முதல் ஏழு பெண் மருத்துவர்களை அப்பா மகளுக்கு கதை வடிவில் அறிமுகம் செய்கிறார். கதையின் இடையிடையே மகள் கேட்கும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் உத்தியின் வழியே வரலாற்று தகவல்களை வாசகர்களுக்கு கடத்திவிடுகிறார்.
அக்காலத்தில் பெண்கள் மருத்துவம் படிக்க அனுமதி கிடையாது என்பதால் மார்கரெட் என்ற பெண்மணி ஜேம்ஸ் பேரி என்ற ஆண் பெயர் வைத்துக் கொண்டு மருத்துவம் படித்து சாகும்வரை ஆண் போலவே வேடமிட்டு வாழ்ந்திருக்கிறார்; ராணுவத்திலும் மருத்துவராகப் பணி புரிந்திருக்கிறார் என்ற விவரங்களெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவர் தான் முதன்முதலில் சிசேரியன் செய்து அம்மாவையும் குழந்தையையும் காப்பாற்றினாராம். ‘இரண்டாவதாக அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரான எலிசபெத் ப்ளாக்வெல் குறித்தும்; நாம் அறிந்த ஆனந்திபாய் ஜோஷியும், முத்துலட்சுமி ரெட்டியும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.