கருப்புசட்டை அணிந்து கவுன்சிலர்கள் ஆர்பாட்டம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கருப்புசட்டை அணிந்து மாமன்ற கூட்டத்தில் ஆர்பாட்டம் வெளிநடப்பு.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 17ஆண்டுகளுக்குப் பிறகு செப்17ல் நடைபெற்றது. இந்தக் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக பக்தர்களுக்கு 7வண்ணங்களில் நுழைவு பாஸ் வழங்கப்பட்டது. ஆன்லைன்மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு 2000 நுழைவு பாஸ் வழங்கியது போக மீதமுள்ள 7000 நுழைவு பாஸ்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் காசுக்கு விற்பனை செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை எனவும் விஐபிகள் மட்டும் அனுமதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் கவனம் செலுத்திய தவெக அரசு பொதுமக்கள் எளியமுறையில் கும்பாபிஷேகத்தை காண எந்தவித ஏற்பாடுகளும் செய்யவில்லை. கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில் பொதுமக்கள் தரப்பில் தற்போது நடைபெற்ற கும்பாபிஷேகம் பொது மக்களுக்கானது இல்லை. மதுரை மக்கள் யாரும் கும்பாபிஷேகத்தை பார்க்க முடியவில்லை. இந்தக் கும்பாபிஷேகம் முழுக்க முழுக்க விஐபிகள் மட்டும் கலந்து கொண்ட கும்பாபிஷேகம் இனி பொதுமக்களாகிய நாங்கள் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டுமானால் இன்னும் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என புலம்பி தீர்த்ததோடு அமைச்சர் நிர்மல்குமாரிடமும் இந்த விஷயத்தை எடுத்துச்சொல்லி வாக்குவாதம் செய்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கருப்புசட்டை அணிந்து ஆர்பாட்டம்
கருப்புசட்டை அணிந்து ஆர்பாட்டம்

ஆனால் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு காலை 10:00 மணிக்குமேல் தான் தான் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மதுரை மேயர் பொறுப்பு நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கருப்புசட்டை அணிந்து மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பொதுமக்களை அனுமதிக்காத அளவிற்கு பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாகவும் இதனைக் கண்டிக்கும் விதமாக தவெக அரசுக்கு எதிராகவும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் மதுரை மாநகராட்சியில் தமிழக வெற்றிக் கழக அரசு ஏதாவது மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வர முயன்றாலும் அது நிறைவேறாமல் போய்விடுகிறது. இதனால் மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு சலசலப்பு  ஏற்பட்டுள்ளது.

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.