இந்தி, தெலுங்கிலும் ‘அன்பில் அவன்’
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்த ’அன்பில் அவன்’ கடந்த 02-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகி, பெரும் வெற்றி பெற்றதால், படத்தின் சக்சஸ் மீட், கடந்த 06-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதில் பேசியவர்கள்…
தயாரிப்பு நிர்வாகி சேதுவில் ஆரம்பித்து படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்கள், பி.ஆர்.ஓ.யுவராஜ் வரை அனைவருக்கும் நன்றி சொன்ன தயாரிப்பாளர் அபிநயா செல்வம், அன்பில் அவன் படத்தை இந்தி, தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

நடிகர்கள் கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ் ஆகியோரும், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர்ஹெய்ன் விழாவிற்கு வரமுடியாததால், அவரது மகன் கிரண் ஹெய்ன், புரமோஷன் ஹெட் கவிதா, ஆர்ட் டைரக்டர் மணிகண்டன், காஸ்ட்யூம் டிசைனர் பெனிடா ஆகியோர் அனைவருக்கும் நன்றி சொல்லி, தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
டைரக்டர் கார்த்திகேயன், “திறமையான புதியவர்கள் பயணிப்பதற்கான பாதையை உருவாக்கித் தந்திருக்கிறார் அசோக் செல்வன். இவரைப் போலவே அபிநயா மேடமும் நல்ல வழிகாட்டியாக இருக்கிறார்”.

ப்ரீத்தி முகுந்தன், “படத்தைப் பற்றிய விமர்சனங்களைப் படித்தேன். அதில் படம் எப்படி இருக்கிறது என்பதை எழுதியதுடன் பின்னணியில் இருந்த உழைப்பையும் ஆர்வத்தையும் எழுதியிருந்தீர்கள். அதற்காக மீடியாக்களுக்கு நன்றி.

அசோக் செல்வன், “மக்களின் பேராதரவு தான் இப்படத்தை வெற்றியடைச் செய்துள்ளது. இதில் சில குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதன் ஆன்மாவும் இதயமும் சரியான இடத்தில் இருப்பதாக உணர்கிறேன். திறமையான நடிகர்களுக்கு இதில் வாய்ப்பளித்ததில் ஒரு தயாரிப்பாளராக எனக்குப் பெருமை தான். இந்த வாரமும் தொடர்ந்து மக்களின் வருகையால் கலெக்ஷன் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு”.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.