அரசு எந்திரம் செயலில் காட்டிய எஸ்பி…

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே பட்டியலின மக்களை கோவிலுக்குள் விட மறுத்த கும்பலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஷானாஸ் இலியாஸ் நடத்திய விதம் உண்மையில் பாராட்டத்தக்கது.

முதலில் கோவில் வாசலில் அமர்ந்து இருந்த ஒரு பெண் மேடம் இது எங்க கோவில் மேடம் என்று கூறுகிறார்..

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கோவில் யாரு உன் பேருல இருக்கா HRCE எடுத்தாச்சுல இனி அது பொது கோவில் என்கிறார்.

பூர்வீகமா இருந்தாலும் யாரு வழிபடுறதையும் யாரும் தடுக்க கூடாதுனு சொல்லும் போது கூட்டத்துல இருந்து ஒருத்தன் அதுசரினு எகத்தாளமா பேச..

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதுசரின்னு சொன்னவன்லாம் தைரியம் இருந்தா முன்னாடி வந்து பேசுனு ஒரே அடிதான்.. சவுண்டு விட்டவன் சத்தத்தையே காணோம்.

ஷானாஸ் இலியாஸ் IPS
ஷானாஸ் இலியாஸ் IPS

ஆவேசமாக பேசும் பெண் கும்பலிடம் எல்லாரையும் வீடியோ எடுத்துட்டு இருக்கேன் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம்னா என்னானு தெரியுமா ? கேஸ் போட்டு விட்டுருவேன் என்றதும் கூட்டம் மெதுவாக அமைதியாகிறது.

பிறகு பூட்டு உடைக்கப்பட்டு பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்துகிறார்கள். சட்டம் அரசு எந்திரம் செயல்பட வேண்டியது இப்படித்தான். ஆனால் பெரும்பாலன இடங்களில் அரசு ஆதிக்க ஜாதிகளின் பக்கமே நின்று பேச்சுவார்த்தை என பூசி மொழுகிவிட்டு போகிறது.

Hatsoff Mam

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.