கார் விபத்தால் நேர்ந்த கொலை! குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை!
திருச்சிராப்பள்ளி மாவட்டம். உப்பிலியுபரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எரகுடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (22), த/பெ.சுப்ரமணி. என்பவர் கடந்த 24.05.19 அன்று எரக்குடி – துறையூர் சாலையில் TN 01 BF 6917. பதிவென் கொண்ட காரினை ஓட்டிச் சென்ற போது, TN 09 R 0592 பதிவென்கொண்ட வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும், இவ்விபத்தில் சிதம்பரம் என்பவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், சிதம்பரத்தின் மருத்துவ செலவுகளுக்காக கார்த்திக்கிடமிருந்து ரூ.8000/- தொகையை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டதாகவும்,
மேலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி சிதம்பரத்தின் உறவினர்களான 1. சரவணன் 36/19, த.பெ. M.G.பாலசுப்ரமணியன். 2. வரதராஜ், S/o ராமசாமி. 3. பாலாஜி. S/o பிச்சை பிள்ளை. 4. மனோகரன் @ காஜா மனோகரன் 53/19, S/o நடராஜன், 5. ஹரிதாஸ், S/o மாசி பிள்ளை, 6. மூர்த்தி 48/19, S/o பழனியாண்டி, வெள்ளாளர் தெரு, ஏறக்குடி, துறையூர் தாலுகா. திருச்சி மாவட்டம் ஆகியோர்கள் சேர்ந்து கார்த்திக் என்பவரை கைகளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இறந்து போன கார்த்திக்கின் சகோதரர் பாலமுருகன் (24) என்பவர் கொடுத்த புகாருக்கு உப்பிலியபுரம் காவல் நிலைய குற்ற எண். 121/19, u/s 147, 294(b), 323, 302 IPC ன் படி 25.05.19 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, 26.05.19 எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (III ADJ) நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக வினேஷ்குமார் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (12.10.26) நீதிபதி சரவணன் அவர்கள் எதிரிகள் 1. ராஜசரவணன் (37), த.பெ. M.G.பாலசுப்ரமணியன், 2. வரதராஜ்(44), S/o ராமசாமி, 3. ராஜேந்திரன் (எ) பாலாஜி (57), S/o பிச்சை பிள்ளை, 4. மனோகரன் @ காஜா மனோகரன் (53), S/o நடராஜன், 5. ஹரிதாஸ் (41), S/o மாசி பிள்ளை, 6. கிருஷ்ணமூர்த்தி (48), S/o பழனியாண்டி, வெள்ளாளர் தெரு, ஏரக்குடி, துறையூர் தாலுகா, திருச்சி மாவட்டம் ஆகியோர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 5,000 அபராதம் வழங்கியும் தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான முன்னாள் உப்பிலியபுரம் காவல் ஆய்வாளர் குருநாதன் அவர்கள் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். மேற்படி வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த உப்பிலியபுரம் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமைக்காவலர் உஷா என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.