இந்த சீசன் ஆரம்பத்துலிருந்து வினோத் பாபுவைக் கவனித்ததிலிருந்து, இதுவரை அவர் பயணித்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. நல்ல Discipline, ஒரு நல்ல Entertainer, செம Talent உள்ள பெர்சன் மற்றும் ஒரு தரமான ‘All rounder’ என்பது புரிகிறது.
Democracy Room ல லீடர் அனுமதியோடு பேசுவது, தவறு எங்கு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பது என வினோத் பாபுவின் குரல் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதை பார்க்க முடிகிறது.
ஜேசன் இங்கிலீஷில் ‘Word Play’ பண்ணி கேம் விளையாடியதை அங்கேயே, “இதற்குத் தமிழ்ல அர்த்தம் என்ன?” என்று கேட்டு ஜேசனின் Strategy ஐ காலி செய்தது அருமை.
சந்தர்ப்பவாதமும், பொறாமையும், கோபமும், சிரிப்பும், அழுகையும், ஏக்கமும் “நாம் எப்படியாவது ஜெயித்து விட மாட்டோமா” என்ற தவிப்பும் நிறைந்த பிக்பாஸ் வீட்டில், தன் திறமையையும், நியாயமான ஆட்டத்தையும் மட்டுமே நம்பித் தொடர்ந்து முன்னேறி வரும் வினோத் பாபுவுக்கு வாழ்த்துகள்.
– கே.எஸ். முகேஷ்
Comments are closed, but trackbacks and pingbacks are open.