ஆசியவியல் நிறுவனத்தின் 45 ஆம் ஆண்டு விழா !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஆசியவியல் நிறுவனத்தின் 45 ஆம் ஆண்டு விழாவும், தரம் மிக்க நல்ல பல நூல்களின் வெளியீட்டு விழாவும் அக்டோபர்  10  அன்று  செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்திலுள்ள தனிநாயகம் அடிகளார் கலையரங்கில் நடைபெற்றது .

தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவர் சா.கி.தே. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் பேராசிரியர் முனைவர் சான் சாமுவேல், இங்கிலாந்து நாட்டின் (இ)லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் தேனியல் செயராசு, யாம் அறக்கட்டளைத் தலைவர், பொறியாளர் சதாசிவம், தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவர், ‘அகரமுதல’ தனித்தமிழ் மின்னிதழின் ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன், சென்னைத் கிறித்தவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் சதாசிவம், புகழ் பெற்ற இதய நல மருத்துவர் மரு.சொக்கலிங்கம், சி.சு.நி.(SSM) கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் மதிவாணன், மியன்மார் நாட்டு இந்தியத் தூதர் பேராசிரியர் இரங்கநாதன், இலங்கை-இந்திய வணிக அவைத் துணைத்தலைவர் சம்புநாதன் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அமெரிக்காவில் வாழும் முனைவர் பிரான்சிசு முத்து எழுதிய The place of Thirukkural in World Ethics; முனைவர் அமுதா பாண்டியன் எழுதிய The theory of Tamil Music; ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பாசுகரன் எழுதிய Tamil Diaspora- A Vibrant Global Community; ஆசியவியல் நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுதிகள்; ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட ‘உரோமமுனி வைத்தியம்; ‘தமிழிலக்கியத்தில் சில தேடல்கள்’ உள்ளிட்ட தொலை நோக்கு கொண்ட புதிய நூல்கள் உலகளாவிய தமிழ்த் திருவிழாவில் வெளியிடப்பட்டன.

– ஆசியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.