தேவா : இசையும் சாதியும் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சில உண்மைகளை சொல்வதால் பகைமையும் வெறுப்பும் இடைவெளியும் உருவாகும். ஆனால், அதை சொல்லாமல் கடப்பதும் நியாயமாகாது. இசையமைப்பாளர் தேவா மறைந்துவிட்டார் என்கின்ற செய்தி வெளியான போது சூர்யா ஆஸ்பத்திரியின் முன்பு நின்று கொண்டிருந்த பாடகி அனுராதா ஸ்ரீராம் தேவா சார் குடும்பத்தினர் அனைவரையும் கட்டிப்பிடித்து ஒரு மகளை விடவும் மேலாக கதறி அழுதார்.  அனுராதா ஸ்ரீராம் தேவாவின் இசையில் பல பாடல்களை பாடியவர். தேவா சார் உலக நாடுகளில் எங்கு இசை நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் அனுராதா இருப்பார்.

ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் டிவி ஷோக்களிலும் தேவா சார் என் குருநாதர் என மிக பெருமிதமாக சொல்வார் அனுராதா. இசையமைப்பாளர் தேவா கானா இசையின் தந்தையாக அறியப்பட்டார். அவர் பிறந்து வளர்ந்த சமூகத்தின் காரணமாக சினிமாவில் சில இடங்களில் ஒடுக்குதலுக்கு ஆளானார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இசையமைப்பாளர் சங்கர் கணேசில், கணேஷ் பட்டியல் வகுப்பு சமூகத்தை சேர்ந்தவர். ஒரு பட்டியல் வகுப்பு சமூகத்தில் பிறந்த காரணத்தினாலேயே பல ஒடுக்குதல்களுக்கு ஆளானார். ஆனால், அதையும் மீறி தான் அவர் சினிமாவில் ஜெயித்தார் என அவரது மகன் டிவி நடிகர் ஸ்ரீ தன்னுடைய பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த தேவா எனும் இசையமைப்பாளரை கானா பிதாமகனை பார்ப்பன சமூகத்தவர் அவருடைய மேதமைக்கு தலை வணங்கியது போல மற்றவர்கள் அவருடைய மேதமையை கண்டுகொள்ளவில்லை என்பதை ஒரு புகாராகவே சொல்கிறேன்.

இசைஞானி இளையராஜாவை ஒரு இசை நிகழ்ச்சியில் இசை மேதை என்று பலரால் புகழப்படுகின்ற பாலமுரளி கிருஷ்ணா கட்டி அணைப்பார். ராசாவை புகழ்வார்.  இளையராஜாவைப் போன்ற ஒரு மேதையை திராவிடம் எங்குமே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் மிக கசப்பான உண்மை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பட்டியல் சமூகத்தில் இருந்து உருவாகும் இசை மேதைகளோ, கல்வியாளர்களையோ, சிந்தனையாளர்களையோ திராவிடம் அவர்களிடம் இருக்கும் மேதமைக்காக ஒருபோதும் கொண்டாடியதில்லை. ஆனால் பார்ப்பன சமூகம் ஒரு கலைஞனுக்குள் இருக்கும்  மேதமையை அவர்களுடைய சாதியை காரணம் காட்டி புறந்தள்ளுவதில்லை. மாறாக, அந்த மேதமைக்கான மதிப்பையும் உயர்வையும் தகுந்த நேரத்தில் தகுந்த இடத்தில் அளிக்கிறார்கள்.

பட்டியல் சமூகத்தில் உருவாகி வரும் வெகு சிலரை அது எந்த துறையாக இருந்தாலும் அவர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் கை தூக்கி விடுகிறவர்களாக அல்லது அவர்களுக்குள் இருக்கும் அறிவை தங்களுடைய லாபத்துக்கு உதவும் என்ற நோக்கில் கூட மேலே தூக்கி விடுகிறவர்களாக அறிவை மெச்சுகிறவர்களாக பெரும்பாலும் பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள்.

என் வாழ்வில் பத்திரிகை துறைக்கு நான் வரும்போது என் கட்டுரைகளையும் கவிதைகளையும் சிறுகதைகளையும் பாராட்டி ”எழுது’ என்கின்ற உத்வேகத்தை கொடுத்தவர் அமரர் கல்கியின் பேத்தி, கல்கி பத்திரிகையில் எடிட்டர் சீதா ரவி எனும் பார்ப்பனர்தான்.

நேர்மை இருப்பின் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள். இல்லையெனில் வழக்கம்போல் நீல சங்கீ எனும் பட்டத்தை கழுத்தில் மாட்டி விடுவார்கள். எதுவாக இருந்தாலும் வரவேற்கிறேன்.

—  நாச்சியாள் சுகந்தி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.