துப்பாக்கி திரைப்படத்தின் அதே மாஸ் சீன் ! சபாஷ் தாராபுரம் போலீஸ் !
தாராபுரம் காவல்நிலையத்தின் Total Strength வெறும் 26 பேர் மட்டுமே . இந்த காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் பாலமுருகன், பாலமுருகனிடமே கொடுத்த புகாரை பாலமுருகனே பதிவு செய்த வழக்கு தான் FIR no 530/2026.
அந்த FIR-ன் விசாரணை அதிகாரியான பாலமுருகன் தலைமையில் ஒரே நாளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 9 பேரை வெவ்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு இடங்களில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதாவது “துப்பாக்கி” திரைப்படத்தில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துவது போல ஒரு மாஸ் சீன் வரும் அல்லவா !
அப்படியொரு மாஸ் சம்பவத்தை தான் தமிழ்நாடு காவல்துறை Tamil Nadu Police. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது மீண்டும் அரங்கேற்றியுள்ளது. மிகச்சிறப்பான இந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்த திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !
பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.