அங்குசம் பார்வையில் ‘எனிமி ஆஃப் தி ஸ்மெக்லர் ’
தயாரிப்பு: ‘எஸ்.ஆர்.ட்ரீம் ஸ்டுடியோஸ்’ டைரக்டர்: சமய முரளி, ஆர்டிஸ்ட்: சரண், சினேகா , ஜேடி.சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், பால சரவணன், காளி வெங்கட், மைம் கோபி, ஜாஃபர் சாதிக், ஒளிப்பதிவு: கவின் பாஸ்கர், இசை: சாம் டேனியல், எடிட்டிங்: ஸ்ரீ வாட்சன், ஸ்டண்ட்: தவசி ராஜ், பிஆர்ஓ: நிகில் முருகன்
துபாயில் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனாக இருக்கிறார் லால். அவர் அனுப்பும் போதை சரக்குகள், தங்கக் கட்டிகளை இங்கே சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு பெப்பே காட்டிவிட்டு கண்டெய்னர் வழியாக கடத்தி இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறார் ஜே.டி.சக்கரவர்த்தி. இவருக்கு கஸ்டமஸ் ஆபீசிலேயே வேலை செய்யும் பாலசரவணன் உதவுகிறார். இவரின் நண்பனான சரண், சக்கரவர்த்தியிடம் வேலைக்குச் சேர்கிறார்.
சின்னச் சின்ன கன்சைன்மெண்டுகளை தானே தனியாக செய்வதாகச் சொல்லி சக்கரவர்த்தியின் நம்பிக்கைக்குரியவனாக மாறுகிறார் சரண். இந்த நிலையில் துபாயிலிருந்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கொக்கைன் போதைப் பொருளை குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கு அனுப்பிவிட்டு, [இதுக்காகவே டைரக்டருக்கு சபாஷ் போடலாம்] தகவலை சக்கரவர்த்திக்குச் சொல்கிறார் லால். இந்த வெயிட்டான சரக்கை தாங்களே இறக்குவதாகச் சொல்லி குஜராத்துக்குச் செல்கிறார்கள் சரணும் பாலசரவணனும். அதன் பின் ஸ்மெக்லிங் பார்ட்டிகளுக்கு இடையே நடக்கும் சீட்டிங் சடுகுடு ஆட்டம் தான் இந்த எனிமி ஆஃப் தி ஸ்மெக்லர்.
எதையும் எதிர்பார்க்காமல் போய் பார்க்கும் படங்கள் சில நேரங்களில் நல்ல படமாக அமைந்துவிடும். அப்படி அமைந்த படம் தான் இது. சர்வதேச அளவில் கடத்தல் கும்பலின் ஸ்ட்ராங் நெட் ஒர்க், இங்கே துறைமுகங்களில் அவர்களின் சாம்ராஜ்யம், கஸ்டம்ஸ் அதிகாரிகளின் சப்போர்ட் இதையெல்லாம் பக்காவாகவும் டீடெய்லாகவும் சொல்லியுள்ளார் டைரக்டர் சமய முரளி. குஜராத் முந்த்ரா துறைமுகத்தின் கஸ்டம்ஸ் உயரதிகாரியாகவும் நடித்து மிரட்டியுள்ளார் டைரக்டர். கீப் இட் அப் ப்ரோ…
ஹீரோ சரண், கடத்தல் கேங்கிற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கார். புதுமுகம் சினேகாவுக்கும் இவருக்குமிடையிலான லவ் கெமிஸ்ட்ரி அவ்வளவாக அட்ராக்ட் பண்ணவில்லை. நடிப்பிலும் ரொம்பவே சுமாராகத் தான் பெர்ஃபார்ம் பண்ணியுள்ளார் சினேகா. சரணின் அம்மாவாக ராதிகா சரத்குமார், சினேகாவின் அண்ணனாக கஸ்டம்ஸ் ஆபீஸ் பியூனாக காளிவெங்கட், குஜராத்தில் சரக்கு கடத்த உதவும் நபராக ஜாஃபர் சாதிக் ஆகிய எல்லோருமே அவரவர் கேரக்டருக்குத் தகுந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
கஸ்டம்ஸ் அதிகாரி வினோதினி வைத்தியநாதனிடன் கம்யூட்டர் பாஸ்வேர்டைத் தெரிந்து கொண்டு கண்டெய்னருக்கு க்ளியரன்ஸ் சர்டிபிகேட் வழங்குவது, 100 கோடி ரூபாய் மெஷினை 10 கோடி என காட்டி துறைமுக அதிகாரிகளுக்கு டேக்கா கொடுத்து மெஷினை எடுப்பது இதிலெல்லாம் பாலசரவணன் ஜோராக பண்ணியுள்ளார்.
மிரட்டலான வில்லனாக ஜேடி சக்கரவர்த்தியைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. இதில் மனுஷன் கெத்தா மிரட்டியிருக்கார். அதே போல் லாலும் சும்மா சொல்லக்கூடாது. துபாயிலிருந்து சென்னைக்கு வந்து சக்கரவர்த்தியை மிரட்டும் சீனில் டெரர் காட்டுகிறார் லால். பேஸ்மெண்ட் கார் பார்க்கிங்கில் லாலுக்கும் சக்கரவர்த்திக்கும் இடையே நடக்கும் ஃபைட் சீனில் தவசி ராஜுக்கு சபாஷ் போடலாம்.
‘எனிமி ஆஃப் தி ஸ்மெக்லர்’-ஐ நல்லாவே ரசிக்கலாம்.
அங்குசம் பார்வையில் ‘எனிமி ஆஃப் தி ஸ்மெக்லர் ’ 49/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.