நீங்க எப்போ Bye – Bye சொல்லப்போறீங்க?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஒரு காலத்தில், வயதான தாத்தா – பாட்டிகள் மட்டுமே கண் கண்ணாடிகள் அணிந்து வந்தார்கள். இன்றோ, சாதாரணமாக ரோட்டில் நடந்து போகும் போது எதிர்படும் மனிதர்களில் எப்படியும் பத்தில் நாலு பேர் கண்ணாடி அணிந்திருப்பதை  சர்வசாதாரணமாக  பார்க்க முடிகிறது. இந்தியாவில் பதின்பருவத்தை கடந்த பெரியவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் அன்றாட நடவடிக்கைகளுக்கு இன்றும் கண் கண்ணாடிகளைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

இளம் தலைமுறையோ எந்நேரமும் செல்ஃபோன் திரையிலேயே மூழ்கி கிடக்கிறது. அதுவும், கோவிட்டில் தொடங்கிய இந்த செல்ஃபோன் தொற்று, கோவிட் காலத்துக்கு பிறகும் தொடர்கிறது. இதுவே, வயது வித்தியாசமின்றி கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் சிதறல் பார்வை போன்ற பார்வை விலகல் குறைபாடுகளுக்கு அடிப்படை காரணங்களாக தொடர்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பள்ளி சிறுவர்களும், பருவ வயது பெண்களும் கண்ணாடி அணிவதை அசௌகர்யமாக மட்டுமல்ல; தன்னம்பிக்கை குறைவாகவும் பார்க்கிறார்கள். பலரின் கேலி கிண்டலுக்கு ஆளாகும் விடயமாகவும் மாறிவிட்டது. இயல்பான முகப்பொலிவையும் கெடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது.

கண்ணாடிகளுக்கு மாற்றாக, காண்டாக்ட் லென்ஸ்கள் ஓரளவு தீர்த்து வைத்தாலும், கருவிழி படல தொற்றுக்கான அபாயத்தை கொண்டிருப்பதால் அதையும் பலர் விரும்பி அணிவதில்லை.

”அந்த கவலை இனி உங்களுக்கு இல்லை. சில நிமிடங்களில், அதிநவீன லேசர் சிகிச்சையை பயன்படுத்தி பல்வேறு விதமான ஒளிவிலகல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்” என்கிறார், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின், கார்னியா மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை பேராசிரியரும் துறை தலைவருமான டாக்டர் பிரக்யா பர்மார், எம்.எஸ்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

90 ஆண்டுகால கண் மருத்துவ சேவையில் தனக்கான தனி முத்திரையை பதித்துவரும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, அதி நவீன லேசர் சிகிச்சை முறைகளை கொண்டிருக்கிறது. இதற்காக, வெளிநாடுகளிலிருந்து கோடி கணக்கான மதிப்புள்ள நவீன சிகிச்சை கருவிகளை தருவித்திருக்கிறார்கள்.

“தற்போது, கண் மருத்துவ துறையில் லேசரை பயன்படுத்தி கார்னியா மடிப்பை உயர்த்தி, ஆழமான கார்னியாவை மறுவடிவமைக்கும் சிகிச்சை லேசிக் (LASIK) சிகிச்சை. கருவிழியின் மேற்பரப்பு அடுக்குகள் மறுவடிவமைக்கப்படும் ஒளிச்சிதைவு கெரெடெக்டமி (PRK). ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு ஆழமான கார்னியா அடுக்குகளை மாற்றியமைக்கும் கான்டூரா லேசிக். கார்னியா மடல் உருவாக்கப்படாமலேயே ஒளி விலகல் பிழைகளை சரிசெய்யும் ஸ்மைல் (SMILE) என பல்வேறு சிகிச்சை முறைகளை கொண்டிருக்கிறது.

இந்த சிகிச்சைகள் பொதுவாக கண்ணில் மயக்க மருந்து சொட்டு மருந்திட்டு மேற்கொள்ளப்படுவதால் வலியற்றது. அவசியமான  நேர்வுகளில் சில நாட்களுக்கு மட்டும் பாதுகாப்பு காண்டாக்ட் லென்ஸ்கள் பொருத்தப்படும் சூழல் எழலாம். சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களிலே வீட்டிற்கு செல்லலாம். அறுவை சிகிச்சைக்குப்பிறகு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தங்கள் இயல்பான பணிகளையும் தொடங்கலாம்.” என்கிறார், டாக்டர் பிரக்யா பர்மார், எம்.எஸ்.

அப்புறம் என்ன? கண்ணாடிக்கும் காண்டாக்ட் லென்சுக்கும் நீங்க எப்போ பை – பை சொல்லப்போறீங்க?

—       கலைமதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.