TRB வழக்கு Zero எப்படி வந்தது?
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு சர்ச்சையானது. இது தொடர்பான வழக்குகள் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக்கிளைகளில் நடைபெற்று வருகிறது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் அக்-28 அன்று நீதியரசர் சுதீர்குமார் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர் பல்வேறு விளக்கங்களை சமர்ப்பித்திருக்கிறார். அதில் முக்கியமாக, பூஜ்யம் மதிப்பெண் வழங்கப்பட்ட இரு நபர்களுடைய விடைத்தாள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சம்பந்தபட்ட கேள்விகளுக்கு அவர்கள் எதுவுமே எழுதாததால்தான் பூஜ்யம் மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது என்பதாக வாதிட்டார். அதேபோல, வணிகவியல் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்திருந்த மற்றொரு மாணவரின் விடைத்தாளையும் சுட்டிக்காட்டி அதன் காரணமாகவே பூஜ்யம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதேபோல, மற்றொரு மாணவருக்கு 17 மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். இதிலிருந்து பிரதான பாடங்களில் நல்ல மதிப்பெண்களை எடுத்தவர்கள்கூட, விரிவான விடையளி பகுதியில் குறைவான மதிப்பெண்களை எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதாக வாதிட்டார்.
வழக்கு தொடுத்த மாணவர்கள் தரப்பில், ஒரே விடைக்குறிப்பை வைத்து மதிப்பீடு செய்த மூன்று மதிப்பீட்டாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை சுட்டிக்காட்டினர். வாதங்கள் முழுமை பெறாத நிலையில், அடுத்த விசாரணைக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த பிறகுதான் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு கிடைக்கும் என்ற நிலையில் வழக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.