அங்குசம் பார்வையில் ‘நூறுகோடி வானவில்’ [ ஜி -5 ஓடிடி]
‘மாதவ் மீடியா ’ பாலாஜி காப்பா & அருண் அருணாச்சலம் தயாரிப்பில் சசி டைரக்ஷனில் உருவாகி , ஜி -5 ஓடிடியி ல் நவம்பர் 06 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது இப்படம். இதில் ஹரிஷ் கல்யா ண், சித்தி இத்னானி , கோவை சரளா , தம்பி ராமையா , ’விஜே ’ பார்வதி , சின்னி ஜெயந்த், சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதி வு : பிரசன்னா எஸ்.குமார், இசை :சித்துகுமார், எடிட்டிங் : எம்.சுபாரக், ஆர்ட் டைரக்டர் : தியாகராஜன், பி .ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [எய்ம் ]
மும்பையின் டிவி சேனல் ஒன்றின் புரோக்கிராம் டைரக்டராக இருக்கிறார் ஹரிஷ் கல்யாண். சேனலின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக கோவா செல்கிறார். அங்கே எதேச்சையாக சித்தி இத்னானியைச் சந்திக்கிறார்.
அவரின் சுட்டித்தனம் ஹரிஷை ஈர்க்கிறது. ஆனால் சித்தியோ வேறொரு இளைஞனை லவ் பண்ணுகி றார். அந்த இளைஞனோ ஒருவிபத்தில் சிக்கி கோமா ஸ்டே ஜுக்குப் போகிறான். அவன் விபத்தில் சிக்கியது தன்னால்தான் என்ற குற்ற உணர்ச்சியில், ஆஸ்பத்திரியில் அவனே கதி என கிடக்கிறார்.
லைல் ஷோவுக்காக சித்தியை நடிக்க வைக்கிறார் ஹரிஷ். பிறகென்ன்ன சித்தி மீது ஹரிஷுக்கு லவ் வருகிறது. அப்புறமென்ன கதைப்படி ஹீரோவும் ஹீரோயினும்க்ளை மாக்ஸில் சேரத்தானே செய்வார்கள் என நீங்கள் நினைத்தால், நீங்கள் தான் சிறந்த ரசிகர். சித்தியை ஹரிஷ் சாலையில் சந்திக்கும் முதல் சீனிலேயே தெரிந்துவிடுகிறது இருவரும் கண்டிப்பா இணைவார்கள் என்று. அதன்படியே நடக்கிறது.
படத்தில் ஹரிஷை விட நடிப்பி ல் அசத்துகிறார் சித்தி இத்னானி . கோமாவில் கிடக்கும் தனது லவ்வரா , டிவி ஷோவி ன் டைரக்டர் ஹரிஷா ? என இருவரையும் மனதில் ஏந்தி தவிக்கும் சீனில் மனசை அள்ளுக்கிறார்
சித்தி இத்னானி . சித்தியின் கன்னக்குழியி ல் சிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவரது பாட்டியாக கோவை சரளா , மற்றும் கோவாவி ல் செட்டிலாகி விட்ட சித்தியி ன் குடும்பம், ஹரிஷி ன் மாமாவாக சின்னி ஜெயந்த் உட்பட சில கேரக்டர்கள் இருந்தாலும் டைமிங் காமெ டியிலும் துறுதுறு ஆக்டிவிட்டீஸிலும் கலக்குகிறார் வி ஜே பார்வதி . சில சமயங்களில் ஹரிஷையே செம கலாய் கலாய்க்கிறார். வெல்டன் வி ஜே பார்வதி .
சித்து குமாரின் இதமான பின்னணி இசையும் மோகன்ராஜனின் பாடல் வரிகளும் நூறுகோடி வானவில்லுக்கு மேலும் வண்ணம் சேர்க்கின்றன. என்ன ஒண்ணு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் படம் ஓடுகிறது. ஆனால் மூன்று மணி நேரம் ஓடுவது போ ல ஃபீ லிங் வருகிறது. மற்றபடி சசி படங்களுக்கே உரித்தான மென்மைத்தனம் இப்படத்தில் இருக்கு.
அங்குசம் பார்வையி ல் ‘நூறுகோடி வானவில்’ [ ஜி -5 ஓடிடி] 40/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.