அங்குசம் பார்வையில் ‘பிளாக் கோல்டு ‘

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: எம்.எம்.ஸ்டுடியோஸ் எம்.மூர்த்தி, இணைத் தயாரிப்பு: எம்.மானஸ்வனி, டைரக்டர்: தீரன் அருண்குமார், ஆர்டிஸ்ட்: வெற்றி, பிரியாலயா, அபிராமி வெங்கடாசலம், லிவிங்ஸ்டன், அருள் டி.சங்கர், சபிதா ராய், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், ஜீவா ரவி, விஜய் டிவி ராமர், நிழல்கள் ரவி, ஒளிப்பதிவு: சந்தோஷ் குமார் வீராசாமி, இசை: கவாஸ்கர் அவினாஷ், எடிட்டிங்: தினேஷ் குமார், ஸ்டண்ட்: மெட்ரோ மகேஷ், பிஆர்ஓ: சதீஷ் & சிவா (எய்ம்).

பெரிய கார் கம்பெனி ஒன்றில் சீஃப் மெக்கானிக்காக இருக்கிறார் வெற்றி. இவரது அப்பா லிவிங்ஸ்டன், அம்மா, தங்கை என நடுத்தரக் குடும்பம். டைரக்டர் ஏ.வெங்கடேஷின்  டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார் லிவிங்ஸ்டன். இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் படமே ஓடாத தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு  தங்கக் கட்டிகளைக் கடத்தும் நைனாராஜா[அருள் டி.சங்கர்]. இவருக்கு உறுதுணையாக இவரது மகள் மல்லி [ சபிதா ராய்]. ஏ.வெங்கடேஷும் அருள் டி.சங்கரும் தொழில் போட்டியாளர்கள். இதைப் பயன்படுத்தி அருள் டி.சங்கரிடம் மாமூல் கறக்கிறார் இன்ஸ்பெக்டர் மூர்த்தி[ தயாரிப்பாளர் தான்].

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதே மாமூல் கேட்டு ஏ.வெங்கடேஷை மிரட்ட, அவர் மறுக்க, அவரின் லாரி டிரைவராக இருக்கும் லிவிங்ஸ்டனை செக்போஸ்டில் மடக்கி, கன்னத்தில் பளார்விடுகிறார். இதனால் மூர்த்தி மீது காண்டாகிறார் வெற்றி. இது ஒருபக்கம்.

இன்னொரு பக்கம் வெற்றியை டீப்பாக லவ் பண்ணுகிறார் பிரியாலயா. ஆனால் இவரின் அப்பா ஜீவாரவிக்கு, வெற்றியை சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் வெற்றியை நோஸ்கட் பண்ணி அனுப்புகிறார் ஜீவா ரவி. இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடித்துவிட்டு, தனியாக இருக்கும் வயதான தம்பதிகளை கொலையும் செய்துவிட்டு தப்பி ஓடுகிறது ஒரு கும்பல்.

இப்படியே இடைவேளை வரைக்கும் பிட் பிட்டா படம் ஓடுது. இடைவேளைக்குப் பிறகும் அரை மணி நேரம் கழித்துத் தான் கோவில்களில் காணிக்கை செலுத்தும் தலைமுடி விற்பனையை வெள்ளைக்காரன் காலத்திலிருந்து கதை சொல்லி, கொஞ்சம் சுவாராஸ்யமாக்குகிறார் டைரக்டர் தீரன் அருண்குமார். அத்தோட அந்தக் கதை முடிஞ்சது. அதுக்குப் பிறகு லிங்ஸ்டன் அஞ்சு கோடி சரக்குடன் காணாமல் போகிறார். இதைக் கண்டு பிடிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் அபிராமி வெங்கடாசலம். க்ளைமாக்ஸில் சில்லுவண்டு வில்லன்கள் எல்லோரும் குளோஸ்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

படத்தின் ஹீரோ வெற்றி எப்பத்தான் ஸ்மார்ட்டா, பிரிஸ்கா நடிப்பாருன்னு தெரியல. நாமளும் பத்து பதினஞ்சு வருசமா பார்க்குறோம். அதே தாடி, அதே கவலை முகம், அதே சிரிப்புன்னு இந்த பிளாக் கோல்டிலும்  ஷோ காட்டியுள்ளார். ஹீரோயின் பிரியாலயா, பார்க்க லட்சணமாவும் இருக்கார், நல்லாவும் நடிக்கிறார். இன்ஸ்பெக்டருக்குரிய கெட்டப்புக்கு அபிராமி வெங்கடாசலம் ஓகே என்றாலும் நடை-உடை-பாவனைகளைக் கொண்டு வர ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

வில்லன்களில் அருள் டி.சங்கர் தான் நன்றாக ஸ்கோர் பண்ணியிருக்கார். அதே சில்லு வண்டு வில்லன்களுடன்  சுருள் வாள் ஃபைட் சீனில் நல்ல டிரெய்னிங் எடுத்து அருமையாக பெர்ஃபாம் பண்ணியுள்ளார். அந்த ஃபைட் முடிஞ்சதும் இவரையும் போட்டுத் தள்ளிவிடுகிறார்கள். அனுபவ நடிகர் & டைரக்டர் ஏ.வெங்கடேஷின் நடிப்பே பல சீன்களில் செயற்கையாகிப் போனது தான் சோகம். லிவிங்ஸ்டனைப் பார்ப்பதற்கே பரிதாபமா இருக்கு.

சுமாரான கதைகளைக் கூட திரைக்கதையில் விறுவிறுப்பாக்கி, படம் பார்ப்பவர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார்கள் சில டைரக்டர்கள். ஆனால் தீரன் அருண்குமாரோ, இந்திய சினிமாவில் யாரும் சொல்லாத கதை கிடைத்தும், அதை நல்ல திரைக்கதையாக மாற்ற முடியாமல் தவித்து, நம்மையும் தவிக்கவிட்டுவிட்டார்.

                                         அங்குசம் பார்வையில் ‘பிளாக் கோல்டு’ 40/100

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.