Saturday, November 21, 2026 | 12:18 PM IST

அங்குசம் பார்வையில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைட் பாக்ஸ் ‘ சந்தீப் குன்னம், ரம்யா குன்றம், டைரக்டர்: பவன் சாதினேனி, திரைக்கதை: குன்னம் கங்கராஜு, ஆர்டிஸ்ட்: துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன், சுவாசிகா, ருஹானி சர்மா , நாசர், கோட்டா ஜெயராம், மானஸி சுதிர், சின்னி ஜெயந்த், கெளதம் மேனன், முரளி சர்மா, ஒளிப்பதிவு: சுஜித் சாரங், இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டிங்: கே.எல்.பிரவீன், ஆர்ட் டைரக்டர்: வம்சி கிருஷ்ணா, காஸ்ட்யூம்: பல்லவி சிங், பிஆர்ஓ: யுவராஜ்.

பள்ளிப்பருவத்திலிருந்தே ஆசிரியர்களிடமும் சரி, மற்றவர்களிடமும் சரி,  கேள்விகள் கேட்கும் நல்ல பழக்கம் உள்ளவள் கிராமத்து அரசுப்பள்ளி மாணவி கல்பனா[சாத்விகா வீரவள்ளி]. இந்த நேரத்தில் அந்த சின்ன கிராமத்திற்கு வரும்  வானியல் அறிஞரான நாசர்,  பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வான் மண்டலம் குறித்து திரையிட்டுக் காண்பிக்கிறார். அப்போது அவரிடம், ”வானம் எவ்வளவு தூரத்தில் இருக்கு? ஒரு நாள் நான் அங்கே போவேன்” என்கிறாள் கல்பனா. அவளின் அறிவாற்றலையும் தன்னம்பிக்கையையும் பார்த்து ஆச்சர்யப்படும் நாசர், அவளுக்கு வீரமங்கை கல்பனா சாவ்லாவின் போட்டோவைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

‘ஆகாயத்தில் ஒரு தாரகை’பத்தாவது வகுப்பில் மாநிலத்திலேயே இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்று, ப்ளஸ் ஒன் வகுப்பில் சேர்ந்தவுடன் அவளுக்கு கிருஷ்ணாவை [துல்கர் சல்மான்] கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார் கல்பனாவின் அப்பா. முதல் இரவில் அவளின் வயதைக் கேட்டு அதிர்ச்சியாகும் கிருஷ்ணா, அவளின் கனவையும் லட்சியத்தையும் கேட்டு, மற்ற விஷயங்களை தள்ளி வைத்துவிட்டு, மனைவியைப் படிக்க வைக்கிறார். திருவனந்தபுரம் ஏரோ ஸ்பேஸ் கல்லூரியில் படிப்பு முடித்து, பெங்களூரில் உள்ள விண்வெளி டெக்னாலஜி காலேஜில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த படிப்பில் சேர்க்கிறார் கிருஷ்ணா. மனைவியின் படிப்புச் செலவு, குடும்பச் செலவுகளுக்காக குஜராத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தின் வேலைக்காக நான்கு ஆண்டுகள் காண்ட்ராக்டில் செல்கிறார் கிருஷ்ணா. இங்கே துல்கருக்கும் ருஹானி ஷர்மாவுக்கும் இடையிலான ’லைட் லவ்’ ஏரியா ரசனைக்குரியது.

ஆகாயத்திற்கும் மேலே விண்வெளியில் கால்பதிக்க வேண்டும் என்ற கல்பனாவின் கனவும் லட்சியமும் நிறைவேறியதா? இதான் இந்த ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ என்ற அற்புதப்படைப்பு, சினிமா பிரமிப்பு. 100% மிகமிக அருமையான, திருப்தியான, மெய்சிலிர்ப்பான சினிமாவைத் தந்த இயக்குனர் பவன் சாதினேனியை நம்ம கைவலிக்க கைதட்டி பாராட்டியே ஆகவேண்டும்.

பெண் கல்வியின் அவசியத்தை, அத்தியாவசியத்தை வான்வெளி வரை கொண்டு சென்ற பவன் சாதினேனி, மிக உயரிய சிந்தனையாளன் என்பதை மறுக்கவே முடியாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். ஆனால் இதில் மனைவி கல்பனாவின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக, ஒரு ஆணாக துல்கர் சல்மானை திரையில் காட்டியிருப்பதற்காகவே பவன் சாதினேனிக்கு மீண்டும் ஒரு சபாஷ்.

படத்தின் கதைக்களம் முழுவதும் தெலுங்கு ஏரியா தான்  என்றாலும்  அதையெல்லாம்  மறக்கச் செய்து, மெய்சிலிர்க்கச் செய்வது படத்தின் உயிரோட்டமான கதையும் அதைச் செழுமைப்படுத்த எழுதிய திரைக்கதையும் [ குன்னம் கங்கராஜு] தான்.

ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள், எவ்வளவு உயரத்தில் செலுத்த எவ்வளவு செலவு, அதில் பயன்படுத்தும் எரிபொருள் தன்மை இதையெல்லாம் ராக்கெட் விஞ்ஞானிகளிடம் மிகத் தெளிவான தரவுகளைப் பெற்று, அதை திரையில் காண்பிக்க டைரக்டர் பவன் சாதினேனியும் அவரது குழுவும் உழைத்த உழைப்பிற்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதுகளும் கெளரவமும் நிச்சயம் கிடைக்கும், கிடைத்தே ஆகவேண்டும்.

‘ஆகாயத்தில் ஒரு தாரகை’துல்கர் சல்மான். இந்த அற்புத நடிகனைப்  பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனது அக்கா சுவாசிகா பார்த்த பெண்ணைப் பார்க்காமலேயே கல்யாணம் செய்துவிட்டு, முதலிரவு அன்று வெட்கித் தலைகுனிவது, “நான் பண்ணிய தப்பைத் திருத்த அவளைப் படிக்க வைக்கப் போறேன்” எனச் சொல்லிவிட்டு, சாத்விகாவுடன் பயணிப்பது, மனைவியின் படிப்புக்காக தன்னுடைய ஆசாபாசங்களைத் தூக்கியெறிவது, இரவில்  சாத்விகா படித்துக் கொண்டிருக்கும் வீட்டில் கரண்ட் கட்டானதும் அரசு பஸ்ஸில் பயணம் செய்து அந்த வெளிச்சத்தில் படிக்க வைப்பது [ செமத்தியான சீன் டைரக்டரே], “பத்துப் பேர் கேலி பண்றதைப்பத்தி கவலைப்படாதே, ஒருத்தர் நம்புனா போதும்” “நீ பூமியைப் பார்க்கக் கூடாது, எப்போதும் ஆகாசத்தைத் தான் பார்க்கணும்”  என சாத்விகாவுக்கு உத்வேகம் கொடுப்பது, குஜராத் நிலக்கரச் சுரங்கத்தில் அல்லும் பகலுமாக உழைப்பது, “அவளுக்கு அப்படி ஒரு கனவு இல்லேன்னா இந்த கிருஷ்ணா இல்லை மேடம்” என ஸ்ருதி ஹாசனிடம் மனமுருகிச் சொல்வது,  மனைவி நிலவில் கால்பதிப்பதை டிவியில் பார்க்க மனமில்லாமல்  ஒரு அறைக்குள் பரிதவிப்புடன் உட்கார்ந்திருப்பது, மனைவியின் லட்சியமும் கனவும் நிறைவேறிய  சேதி கேட்டதும் மனசெல்லாம் பூரிப்புடன் வெளிப்படுத்தும் உடல் மொழி,  என க்ளைமாக்ஸ் வரை துல்கர் சல்மான் என்ற ஆகச் சிறந்த நடிகனால், இந்த ’ஆகாயத்தில் ஒரு தாரகை’ ஆகச்சிறந்த அற்புத சினிமாவாக நம்ம மனசுக்குள் இறங்குகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கல்பனாவாக, லட்சிய மங்கையாக படம் முழுவதும் ஜொலிக்கிறார் சாத்விகா வீரவள்ளி. கல்லூரியில் படிக்கும் போது எல்லோரும் ஏளனம் செய்தாலும் மனம் தளராமல் தனது கனவை நோக்கிப் பயணிப்பது, தனது டீமுடன் சேர்ந்து தயாரித்த பிளாஸ்மா தொழில்நுட்ப ராக்கெட்டை பறக்கவிடும் முதல் சோதனை  தோல்வியில் முடிந்தவுடன் கல்லூரின் டீன் கெளதம் வாசுதேவமேனன் அவமானப்படுத்தியும் கலங்காமல், அடுத்த அடியை எடுத்து வைக்கும் முயற்சிகள், நிலவில் வெற்றிகரமாக கால்பதித்ததும் பழைய ஆசான் நாசரிடம் சேட்டிலைட் வீடியோ காலில் பேசி குருவுக்கு நன்றி சொல்வது, அதற்கு முன்பு தான் தனது அப்பாவிடம் “என்னையும் அம்மாவையும் நீங்க பண்ணிய டார்ச்சருக்காக உங்களை மன்னிக்கவே முடியாதுப்பா. ஆனா   நீங்க டார்ச்சர் பண்ணலேன்னா கிருஷ்ணா மாதிரி ஒரு புருசன் கிடைச்சிருக்கமாட்டான். அதுக்காக  உங்களை மன்னிக்கலாம்பா” என கசிந்திருகுவது, நிலவில் இருந்து பூமிக்குத் திரும்பியதும் கணவன் கிருஷ்ணாவைத் தேடி ஓடோடி வந்து அவரை மீடியாக்கள் முன்பு நிறுத்தி கண்ணீர் மல்க நன்றி சொல்வது என சகல ஏரியாவிலும் சாத்விகா வீரவள்ளியின் நடிப்புக் கொடி கம்பீரமாக பறக்கிறது.

‘ஆகாயத்தில் ஒரு தாரகை’இதற்கடுத்து டாப் ஸ்கோரர் யார் என்றால் சாட்சாத் நம்ம ஸ்ருதி ஹாசன் தான். கென்யாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் ஒரு ராக்கெட்டை செலுத்த முயன்று அது ஃபெயிலியரானதும் இந்தியாவுக்குத் திரும்பி, பிளாஸ்மா டெக்னாலஜியைக் கண்டு பிடித்த கல்பனாவைத் தேடுவதாகட்டும் விஞ்ஞானி சங்கர நாராயணை அசால்டாக டீல் பண்ணுவதாகட்டும்,  சரக்கு தம்மு என கேஷுவலாக இருப்பதாகட்டும் , ரோஹிணி கரியப்பா கேரக்டரில் தன்னை  கனகச்சிதமாக பொருத்திக் கொண்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

இதில் செம ஹைலைட்டான சீன் என்னன்னா… கல்பனா யாருனே தெரியாத போது,  கல்பனாவையும் கிருஷ்ணாவையும் தனது வீட்டுக்கு வரவழைத்து பேசும் போது, “ஸ்ட்ராங்கா ஒரு காபி கிடைக்குமா?” என ஸ்ருதி கேட்க, சமையல்கட்டுக்குள் கல்பனா காபி போடும் போது, போன் போட்டு, “உங்களைப் பார்க்கணும் கல்பனா, இப்ப நீங்க எங்க இருக்கீங்க?” என ஸ்ருதி போனில் கேட்க, “உங்க சமையக்கட்ல தான் இருக்கேன் மேடம்” என சாத்விகா சொல்ல, “என்னது என் வீட்டு சமையல்கட்டிலா?” என ஷாக்காகி, ஓடோடிப் போய் சாத்விகாவை ஆரத்தழுவி, அதன் பின் அவரின் நிலவுப் பயணத்திற்கு  ஆதாரமாய் இருப்பது வரை ஸ்ருதி ஹாசன், கமல்ஹாசனின் மகள் என்பதை நிரூபித்துவிட்டார்.

“கனவையும் லட்சியத்தையும் சுமந்து கொண்டு திரியும் போது பத்துப் பேரைப் பார்த்தால் யாராவது ஒருத்தர் வழிகாட்டுவார்”, “நான் அங்கே போகலைன்னா, உங்க மனசுக்குள் பூட்டி வச்சிருக்கும்  என்னுடைய கனவு எப்படி நிறைவேறும்?” படம் நெடுக இப்படி மனமுருகும் வசனங்களை எழுதியவருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

இந்த ‘ஆகாயத்தில் ஒரு தாமரைக்கு’ பெரிய ஆதாரமாக இருப்பது நம்ம ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. நிலவை நோக்கி  சாத்விகா பயணிக்கும்    விண்கலம் போகும் போது இசையை மெளனப்படுத்தி, அது வெற்றிகரமாக அங்கே லேண்ட் ஆகும் போதும் சரி, பூமியில் லேண்ட் ஆகும் போதும் சரி, ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை அபாரம். இவருக்கு சற்றும் சளைக்காமல் உழைத்திருப்பவர்கள் கேமராமேன் சுஜித் சாரங்க், ஆர்ட் டைரக்டர் வம்சி கிருஷ்ணா, மற்றும் விஎஃப் எக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்கள், இரண்டே முக்கால் மணி நேரம் படம் ஓடினாலும் எந்த சீனிலும் கிரிப் மிஸ்ஸாகாமல் பார்த்துக் கொண்ட எடிட்டர் கே.எல்.பிரவீன், போன்ற டெக்னீஷியன்கள் தான்.

‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ ஆகச் சிறந்த அற்புத சினிமா. அதனால மக்களே… கண்டிப்பா இந்த ஆகாயத்தைப் பாருங்கள், மெய்சிலிர்த்து……

100 % ஆத்ம திருப்தியுடன் தியேட்டரிலிருந்து வெளியே வருவீர்கள்.

அங்குசம் பார்வையில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ 88/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.