திருச்சியில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. அங்குசம் செய்தி எதிரொலி..
திருச்சியில் போலீசார் நடத்திய கஞ்சா வேட்டை.. அங்குசம் செய்தி எதிரொலி..
கடந்த 31/05/2021 அன்று அங்குசம் செய்தி இணைய இதழில் வெளியிடப்பட்டிருந்த திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா என்கின்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
*திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..*
திருச்சியில் கொரோனா காலத்திலும் கட்டுக்குள் அடங்காத சரக்கு -கஞ்சா..
அதில் கொரோனா முழு ஊரடங்கு காலகட்டத்தில் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் திருச்சியில் பண்டல் பண்டலாக கஞ்சா சிக்குவது எப்படி? என்கிற கேள்வியுடன் மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி கருத்து கேட்புடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன்மூலம் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் எதிரொலியாக ஏற்கனவே உறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதி நகர் பகுதியில் 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகளான ஹரிஹரன் மற்றும் மதன் கோவிந்தராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் மேற்கண்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலியை சேர்ந்த சுள்ளான் என்ற லட்சுமணன் எனும் நபரின் மூலம் திருச்சிக்கு கஞ்சா பொட்டலங்களை காரின் மூலம் எடுத்து வந்ததாகவும்,
மேற்படி நேற்று 02/06/2021 உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்சி உறையூர் கோணக்கரை டாஸ்மாக் கடை அருகே காரில் கஞ்சா எடுத்து வருவதை அறிந்த தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்த சுள்ளான் என்ற இலட்சுமணன் உறையூர் குமரன் நகரை சேர்ந்த அருளானந்தன் கோவிந்தராஜ் கைது செய்தனர் மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த திருச்சி தேவதானத்தை சேர்ந்த மில்டன் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கும்பலுக்கு கஞ்சா எங்கிருந்து சப்ளை ஆகிறது என்கிற விசாரணையை துவக்கியுள்ளனர்.
திருச்சியில் கஞ்சா கயவர்களை “களை” எடுப்பதில் காவல்துறை மும்முரம் காட்டி வருவது பொதுமக்களிடையே வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது..
–ஜித்தன்