பாண்டியன் ரயிலில் கொள்ளையடித்த திருச்சி திருடர்கள்-சுற்றிவளைத்து தூக்கிய தனிப்படை போலீஸ்…
பாண்டியன் ரயிலில் கொள்ளையடித்த திருச்சி திருடர்கள்… சுற்றிவளைத்து தூக்கிய தனிப்படை போலீஸ்…
கடந்த 26.05.21 ஆம் தேதி திருச்சி பொன்மலை ஹோம் சிக்னலில் சென்னை – மதுரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி (02637) நிற்கும் போது,
அதில் S7 கோச்சில் பயணம் செய்த மதுரை அவனியாபுரம் சேர்ந்த முருகேசன் (வயது -63) S/o, நீலமேகம் என்பவருடைய மனைவியின் ஹேன்ட் பேக்கை, 20ல் இருந்து 25 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் அந்த ஹேண்ட்பேக்கை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற இருப்புப்பாதை காவலர்களும், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினரும் விசாரணை தொடங்க ஆரம்பித்தனர்.
இதுதொடர்பாக திருச்சிராப்பள்ளி இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் அடிப்படையில் புகார்தாரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் திருச்சி மத்திய ரயில் இருப்புப்பாதை காவல் நிலைய குற்றஎண் 34 | 2| U | S 379 IPL-ல் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அரியமங்களம் மேம்பாலத்திற்கு கீழ் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கி இருந்தவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் முற்பட்டபோது நாகூர் அனிபா (வயது -20) எனும் நபர் S/o கைது செய்யப்பட்டார்.
மேலும் போலீசார் பிடிக்க முற்பட்டபோது தப்பியோடிய ஜீவா நகரை சேர்ந்த துரைராஜ் , சூர்யா ஆகியோர் இன்று 2/06/2021 காலை ஜீவா நகர் பகுதியில் இருப்பதை அறிந்து காவல் உதவி ஆய்வாளர் லட்சுமி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஜவான் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கண்ட இரண்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில்
கைது செய்யப்பட்ட நாகூர் அனிபா மீது ஏற்கனவே தில்லைநகர் காவல்நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவருகிறது.
குற்றவாளிகளை பிடிப்பதில் அதிதீவிரம் காட்டி சிறப்பாக செயல்பட்ட திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவலர்களுக்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவிய ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் திருச்சி ரயில்வே எஸ் பி செந்தில்குமார் பாராட்டுகளை தெரிவித்தார்..
–ஜித்தன்