கோவை திமுகவுக்கு புதுவரவு ? கலைஞர் பிறந்தநாள், மகேந்திரன் ட்விட் !

0

தமிழக முதல்வர் கலைஞரின் 98 வது பிறந்த நாள் ஜூன் 3 இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வரக் கூடிய நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவராக இருந்து சமீபத்தில் விலகிய கோயம்புத்தூரைச் சேர்ந்த மகேந்திரன் கலைஞர் பிறந்த நாளிற்கு ட்வீட் செய்துள்ளார்.

மகேந்திரன் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோயமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர். தற்போது முடிவடைந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறினார். திமுகவில் சேருவார் என்று எதிர்பார்த்த நிலை, இன்று கலைஞர் கருணாநிதி 98 வது பிறந்தநாள் கொண்டப்படும் நிலையில், இன்று மகேந்திரன் பதிவு செய்துள்ள டுவீட்டில், சுய மரியாதை இயக்கத்தையும் , சமூக நீதியையும் , திராவிட சித்தாந்தத்தையும் தம் சொல்லால் , செயலால் , எழுத்தால் உலகறியச் செய்தவர் ; திருக்குவளை ஈன்றெடுத்த திராவிட சூரியன் , 5 முறை தமிழகத்தை ஆண்ட , ஐயா திரு . கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறப்பு ஓர் சரித்திரம். என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் விரைவில் திமுகவில் இணைவார் என்று கூறப்படும் நிலை இந்த பதிவு, அதை உறுதிச்செய்வதாக உள்ளது.

மேலும் திமுகவிற்கு கோவையில் கட்சியை வளர்க்க பலமான ஆட்கள் தேடி வரும் நிலையில் மகேந்திரனின் வருகை திமுகவிற்கு கூடுதல் பலம் என்று கூறப்படுகிறது.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.