சட்டவிரோதமான மகளிர் விடுதிகள் ! அதிரும் திருச்சி ! 😱🧐😳

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

திருச்சியில் சட்டவிரோதமான மகளிர் விடுதிகள் ! 

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திருச்சி மாவட்டத்தின் மையப் பகுதியான சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் ஆண்டாள் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய உரிமம் இன்றியும் மற்றும் உரிமம் புதுப்பிக்காமலும் முறைகேடாக பல மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் சமூக நலத்துறை அலுவலரின் கவனத்திற்கு அந்த புகாரை கொண்டு சென்றிருக்கின்றனர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு W.P.No.6629 of 2019 படியும் மற்றும் தமிழ்நாடு அரசாணை எண்G.O.(Ms) No.10 21-02-2015 படியும் மகளிர் விடுதிக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் தெளிவாக வழங்கியுள்ளது.

ஆனால் மேற்கண்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் திருச்சியில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகளும்  உரிய வகையில் மனு செய்து உரிமம் பெற வேண்டுமென்று திருச்சி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் எச்சரிக்கைகள் கொடுத்தும், கீழ் உள்ள அதிகாரிகள் அதை அலட்சியமாக செய்து வருகின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனால் தற்போது வரை திருச்சியில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மகளிர் விடுதிகள் இன்றுவரை தொடர்ந்து இயங்கி வருவதற்கு அதிகாரிகளே முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான மகளிர் விடுதிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் அந்த பகுதி மக்கள்.

மேலும் இவ்வாறு சட்டவிரோத விடுதிகளில் தங்க வைக்கும் பெண்கள் திருச்சியில் சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பா-களுக்கும் தவறான தொழில்களுக்கும் அழைத்து செல்லப்படுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு இரவு நேரங்களில் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்கள் அழைத்துச் செல்ல பலரும் வந்து செல்வதால் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர் அந்த பகுதி மக்கள்.
இதுகுறித்து சமூக நலத் துறை அதிகாரிக்கும் புகார் அளித்துள்ளதாக கூறுகின்றனர் அந்த பகுதி மக்கள்.

இதை விட கொடுமை என்னவென்றால்  90 ஆண்டுகளாக எந்த வித முறையான அனுமதி வாங்காமல் திருச்சியில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் விடுதி நடந்து கொண்டு இருப்பது தான் அதிர்ச்சியை அளிக்கிறது.

இது குறித்து ஒரு சமூக ஆர்வலர் ஒருவர் தமிழக முதல்வரின் முகவரிக்கு ஆன்லைன் போர்ட்டபிள்  புகார் கொடுக்க – அதற்கு விளக்கம் கேட்டு RJD அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பியவுடன்  கல்லூரி நிர்வாகம்  சுதாரித்து கொண்டு உடனே விடுதிக்கு அனுமதி வாங்க விண்ணப்பிக்க உள்ளோம் என்று பதில் கொடுத்து உள்ளார்கள்.

கல்லூரி நிர்வாகமே இப்படி ஒரு அலட்சியம் என்றால் வணிகம் நோக்கில் நடத்தப்படும் தனியார் பெண்கள் விடுதிகளை சொல்லவா வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.