உதயநிதியை மையப்படுத்தி நடைபெறும் அரசியல் ; திமுக கிசு கிசு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடைய மகனும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும். மேலும் கட்சியை போல ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திமுகவில் பேச்சு பெரிதாக எழுந்து இருக்கிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இதற்காக சித்தரஞ்சன் சாலையில் இருந்து வாய்மொழி உத்தரவு பல்வேறு மாவட்டங்களுக்கும், இளைஞர் அணியின் மாவட்ட நிர்வாகிகளுக்கும் சென்றிருக்கிறதாம்.இதன் ஒரு பகுதி தான் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டோடு மிகவும் நெருக்கமானவராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன் முதலில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றும், அது மக்களின் விருப்பம் என்றும் பேசினார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் பேசத் தொடங்கினர். இதில் மேலும் ஒரு படி சென்று மூத்த அமைச்சரான கே என் நேருவும், அமைச்சர் நாசரும் கூட உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பேசினர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மேலும் இதை இளைஞர் அணியின் மூலமாகவும், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மூலமாகவும் கோரிக்கையாக தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சித்தரஞ்சன் சாலையில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.
இதே சமயம் சமீபத்தில் சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்றது. இதில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை கூறி இருக்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் தயாநிதி மாறன் தலைமையிடம் இந்தக் கோரிக்கையை தெரியப்படுத்துவதாக உறுதி கூறியிருக்கிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட உள்ள நிலையில் அதில் உதயநிதிக்கு முக்கிய துறை ஒதுக்கலாமா என்று ஆலோசிக்கப்படுகிறது. அதேசமயம் முக்கிய துறைகள் அனைத்தும் மூத்த அமைச்சர்களிடம் உள்ளதால் மூத்த அமைச்சர்களிடம் உள்ள துறை அமைச்சரிடம் இருந்து பறிக்க முடியாது, இதனால் இளைஞர் நலன், விளையாட்டுத் துறைகளை உதயநிதிக்கு ஒதுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறதாம். இதனால் விரைவில் உதயநிதி அமைச்சராக போவதாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக திமுகவினர் கிசுகிசுக்கின்றனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.