அதிர வைக்கும் அங்குசம் செய்தி
- ஜவஹர் ஆறுமுகம், மூத்த பத்திரிகையாளர், திருச்சி.
திருச்சியில் இருந்து வெளிவரும் “அங்குசம் செய்தி ” இதழ் புரட்டினால் வியப்பு, அதிர்ச்சி.
சென்னையில் இருந்து வருகிற புகழ்பெற்ற இதழ்களில் இல்லாத ஆழமான , கருத்துள்ள செய்திகள். சார்பற்ற தன்மை. அரசியல்
இதழா ? புலனாய்வு இதழா ? சமூதாய இதழா ? சினிமா உள்பட எல்லாம் இருக்கிறது.
அகில இந்தியச் செய்திகளும் இருக்கிறது. சில ரகசியங்கள் வெளிவருகின்றன. பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த ஜெ. ஜான் டேவிட் ராஜ் ( JDR ) இதன் ஆசிரியர் . வரிக்கு வரி தெளிவு.
புதுவகையான செய்தி சேகரித்து வெளியிடும் உத்தி. பல கேள்விகள். பல உண்மைகள். பல எச்சரிக்கைகள். பாமரர்கள் முதல் முதல்வர் ஸ்டாலின் வரை எல்லோரும் கவனிக்க வேண்டிய இதழாக “அங்குசம் செய்தி ”
வீடு, மனை வாங்க சில ஆலோசனைகள். கண்ணியமான அரசியல் விமர்சனங்கள். விவசாய ஆலோசனைகள். ரஷ்யா, உக்ரைன் போர்ச் செய்திகளும் உள்ளன. திருச்சி சபரி மில் தொழிலாளர் போராட்ட விபரம். ஃபேன்டசி செக்ஸ் என்றால் என்ன ? ஒரு அலசல். இதழைப் படித்தால் திகைப்பு.
மனநிறைவு. வெறும் 15 ரூபாய் விலையில் . அன்பு நண்பர்களே கடைகளில் தேடி வாங்கி படியுங்கள். நீங்களும் இதனை உணருவீர்கள். ஒரு பத்திரிகையாளனாகப் பெருமை கொள்கிறேன். பாராட்டுகிறேன்.