அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் போட்டித் தேர்வா ? 34 மதிப்பெண் முறையிலா?

0

ரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் இன்றைக்குப் போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்தால் என்ன என்று பேசிவருகிறார்கள். வழக்காடு மன்றம் சென்றுள்ளார்கள் குறிப்பாக அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்கள் இச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே அவர்கள் போட்டித்தேர்வு வைக்கச்சொல்லி தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் அவர்கள் இன்றைக்குப் போட்டித் தேர்வு வைக்கச்சொல்லி பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார்கள். போட்டித் தேர்வு அரசுக் கல்லூரிகளுக்கு 1998இல் கடைசியாக வைக்கப்பட்டது. தற்போது 2019 இல் மீண்டும் போட்டித்தேர்வு வைக்கச் சொல்கிறார்கள். இன்றைக்குப் போட்டித் தேர்வு வைத்தால் 40 வயதைத் தாண்டியவர்கள் எவ்வாறு தேர்வைச் சந்திக்க இயலும் போட்டித் தேர்வு மட்டுமே ஒருவருடைய திறனை மதிப்பிட்டு விடுமா ? பல ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றிய அனுபவத்திற்கு மதிப்பில்லையா?

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த 34 மதிப்பெண் சிஸ்டம் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்பட்டு வருபவை தான். முன்னாள் உயர் கல்வி அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்து இந்த முறையை அறிவித்தார் . இந்த முறையில் ஏற்கனவே இரண்டு மூன்று டிஆர்பி நடந்து அதன்மூலம் ஆயிரக்கணக்கான உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள் .இந்த முறை என்பது பல்வேறு வழக்குகளின் மூலம் நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்ட வடிவமாகும் .இதில் இனி மாற்றங்கள் செய்தால் ஏற்கனவே பணியமர்த்தப்பட்ட டிஆர்பி தவறானதாக ஆகிவிடும்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

போட்டித் தேர்வு நடத்தப்பட்டால் முதுநிலை அதனோடு செட் நெட் உள்ள இளைஞர்கள் பெருமளவில் பணி வாய்ப்புப் பெறுவார்கள். இன்றைக்கு அரசுக் கல்லூரிகள் பெரும்பாலானவற்றில் எம்பில் பிஎச்டி பட்டப்படிப்புகள் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
எம்பில் பிஎச்டி மாணவர்களுக்கு நெறியாளராக இருப்பதற்கு முனைவர் பட்டம் கண்டிப்பாக அவசியம் .முனைவர் பட்டம் முடிக்காதவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டால் அரசுக் கல்லூரிகளில் உள்ள எம்பில் பிஎச்டி படிப்புககளை மூடும் நிலை ஏற்படும். ஆய்வுக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நல்ல பணி அனுபவம் உடையவர்களை முனைவர் பட்டம் முடித்தவர்களைத் தேர்வு செய்வதற்கு தற்போதைக்கு இந்த 34 மதிப்பெண் சிஸ்டமே சிறந்ததாகும். நாற்பது வயதைத் தாண்டியவர்கள் பணிவாய்ப்புப் பெறுவதற்கு இதுவே சிறந்த முறையாகும். இதுவே சமூகநீதி ஆகும். 1998 க்கு பிறகு போட்டித் தேர்வு நடத்தாமல் விட்டது யார் பொறுப்பு .இவ்வளவு காலம் போட்டித் தேர்வு நடத்தி அவர்களைத் தெரிவு செய்யாமல் விட்டதற்கான சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு போன்றதுதான் அவர்கள் பெற்ற கல்வி பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதற்கான இந்த வாய்ப்பு கடந்த டிஆர்பி இதே 34 மதிப்பெண் முறையில்தான் நடந்தது .அப்போது வழக்குத் தொடுப்பதற்கு நாதி இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றைக்குப்பலர் கச்சைகட்டி வருவதின் மர்மம்தான் என்ன? அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் என்ன வகையான நியமன முறை பின்பற்றப்படுகிறது அதன் மீது இவர்கள் ஏதாவது கேள்வி எழுப்பினார்களா. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமாக பணி நியமனம் செய்து அந்தப் பல்கலைக் கழகமே திவாலாகிப் போய் அதில் பணியாற்றியவர்களை ஆயிரக்கணக்கில் அரசுக்கல்லூரிக்கு மாற்றினார்களே அப்போது இவர்கள் எங்கே போனார்கள். இன்றைக்கு ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் அரசுக்கல்லூரி நியமனங்களை தடுப்பதன் மூலம் ஒரு மிகப்பெரிய அநீதியை செய்து வருகிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட டிஆர்பியை அரசு எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் இதில் பின் வாங்கினால் இன்னும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படத்தான் செய்யும்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.