அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பொன் மாணிக்கவேல் – தமிழக அரசு மோதல் ஜெயிக்கப்போவது யாரு ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க மறுத்த தமிழக அரசு : சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க அரசாணை வெளியிட்டது. 

 

சென்னை: சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தமிழக அரசு – பொன். மாணிக்கவேல் மோதல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பல முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் அதிரடி சோதனை செய்து சிலைகளை கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் 2018 நவ., 30ல் பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்தது. அன்றே, சென்னை உயர் நீதிமன்றம், இவரை ஓர் ஆண்டுக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இதையடுத்து கடந்த ஓராண்டாகவே தமிழக அரசுடன் பொன். மாணிக்கவேலுக்கு மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக பொன். மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக குறை கூறுவதும், எந்த ஒரு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்றும் அதிரடியாக நேருக்கு நேர் புகார் கூறி வந்தார்.

Admission Enquiry Form

நிலுவையில் உள்ள பதவி நீட்டிப்பு தொடர்பான வழக்குகள்

இந்த நிலையில் பொன் மாணிக்கவேலின் பணிக்காலம், இன்று  நிறைவு பெறுகிறது. இதற்கிடையில், பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில், அவரது சார்பில், வழக்கறிஞர் மணி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை, டிச., 6க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் , பொன் மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு செய்ய உத்தரவிட கோரி பொன்மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் தற்போது பிறப்பிக்க முடியாது என கூறி, டிசம்பர் 6ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில் சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.