கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் தொடரும் தற்கொலைகளின் பட்டியல்

0

டெல்டா கல்வி நிறுவனங்களில் அடுத்தடுத்து மாணவ மாணவிகள் தற்கொலைகள் பட்டியல்

 

சமீபகாலமாக தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இயங்கி வரும் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை என்பது பெருமளவு காணப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் ஆசிரியர்கள் திட்டியதாலும், மன ரீதியான டார்ச்சல் கொடுத்ததாலும் மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளும் வெளியே தெரியாமல் அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றது.

2 dhanalakshmi joseph
பாத்திமா

சமீபத்தில் பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியால், சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டார்.

- Advertisement -

- Advertisement -

சம்பவம் -1

திருச்சியில் அய்மான் கல்லூரியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஜெப்ராபர்வின், பள்ளிக்கல்வி வரை இந்தியில் படித்ததாகவும். கல்லூரிப் பாடங்கள் ஆங்கில வழியில் நடத்துவதால், அவர் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டார் எனவும் அதன்காரணமாகவே விடுதியிலேயே தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் விசாரணையில் கூறப்பட்டது.

சம்பவம்-2

திருச்சி தா.பேட்டையில் இயங்கி வரும் சௌடாம்பிகா பள்ளி 11 வகுப்பு மாணவி தன பிரியங்காதேவி தாவரவியல் ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னே திட்டியதால் விஷ மருந்து அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்.

ஜெப்ராபர்வின்

சம்பவம்-3

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்த விழுப்புரம் மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகள் அனிதா காதல் தோல்வி காரணமாகவும் தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார்.

சம்பவம்-4

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்துவந்த திருச்சி, துறையூர் வளையப்பட்டியைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் செந்தில்குமார், படிப்பு வராததால், எலி மருந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

தற்கொலை முயற்சி செய்த ஜெனிபர் –

சம்பவம்-5

4 bismi svs

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி தற்கொலை விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் எம்.எஸ்.சி படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவர் தங்கியிருந்த விடுதி அறையில் மயங்கிக்கிடந்த அவரை மீட்டு சக தோழிகள், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் மாணவி ஃபினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், தற்கொலை முயற்சிக்கு முன்பாக மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், பல்கலைக்கழக மண்ணியல்துறை தலைவர் சக்திவேல் என்பவர் கொடுத்த டார்ச்சரால் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் மாணவி தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் தப்பினார்.

சம்பவம்-6

பிரசாத்

திருச்சியிலுள்ள தூய பவுல் இறை யியல் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்த மாணவர் பிரசாத்(25) தனது மரணம் குறித்து ஓவியம், கவிதை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம்-7

ரஞ்சித்

திருவாரூர் வேலுடையர் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மீனவ சமூகத்தை சேர்ந்த மாணவன் ரஞ்சித் உடற்கல்வி ஆசிரியர் தவறான வார்த்தைகளில் திட்டியதால் மனஉளைச்சலில் வகுப்பறையிலேயே தூக்கிட்டு இருந்தார்.

இதுப்போன்ற அடுத்தடுத்த சம்பவம் அனைத்துத் தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நேரத்தில் கடந்த நவ- 30 தேதி திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சம்பவம் -8

திருவாரூர் அருகே நன்னிலம் அடுத்துள்ள நீலகுடி கிராமத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

மைதிலி

இந்த நிலையில் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் மைதிலி. இவர் இக்கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலைகழகத்தின் விடுதியிலேயே தங்கி படித்து வரும் நிலையில், விடுதியில் நேற்று (30.11.2019) இரவு சக மாணவிகள் சாப்பிட சென்ற நேரத்தில் மைதிலி மட்டும் சாப்பிட போகாமல், விடுதி அறையிலேயே இருந்துள்ளார். மற்ற மாணவிகள் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது அறை பூட்டிய படியே, அறையின் உள்ளே உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டபடி தொங்கிக் கொண்டிருந்தார். வெளியே சென்று திரும்பி வந்து பார்த்த மாணவிகள் சத்தமிட்டுள்ளனர். அடுத்தடுத்த அறையில் இருந்து ஓடிவந்து மாணவிகள் பார்த்தபோது மாணவி மைதிலி தூக்கு போட்டு இறந்துள்ளது தெரியவந்தது.

செந்தில்குமார்

உடனடியாக மத்திய பல்கலைகழக நிர்வாகம் சார்பில் நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மைதிலியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் இன்னும் இதுபோன்ற பல தொடர் தற்கொலைகள் நாளுக்கு நாள் மாணவர்களிடையே பெருகிக்கொண்டே தான் போகிறது, சிறிய கல்வி நிறுவனம், பெரிய கல்வி நிறுவனங்கள் என்ற வரைமுறை இல்லமால், பணத்திற்காக மட்டும் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் கல்வி நிறுவனங்கள் அவர்களது வாழ்க்கை குறித்த அனுபவங்களையும், ஆலோசனைகளையும் வழங்குவதுமில்லை, யோசிப்பதுமில்லை, இவற்றையெல்லாம் தடுக்க அரசு தனி ஆலோசனைக்குழு அமைத்து விசாரித்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் சில மாணவர்களின் உயிர்களாவது தற்கொலையிலிருந்து தப்பும்…

– திருச்சி ஜித்தன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.