அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வதந்தி வீடியோ வெளியீட்டவரை தேடி பீகாரில் முகாம் தமிழக போலீஸ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

வடமாநில தொழிலாளர்களை தாக்குவதுபோன்று வதந்தி வீடியோ பதிவிட்டவரை பிடிக்க கோவை போலீசார் பீகாரில் முகாமிட்டு உள்ளனர். கோயம்புத்தூர் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்று வதந்தி வீடியோ வெளியீட்டவரை பிடிக்க கோவை போலீசார் பீகாரில் முகாமிட்டு உள்ளனர்.

வடமாநில தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மில்கள், விசைத்தறி, கட்டுமான நிறுவனங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது போன்ற போலி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. மேலும் அதில், தமிழகத்தில் தங்கி இருக்கும் வடமாநிலத்தினர் உடனடியாக அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

போலி வீடியோ இந்த வீடியோவை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அந்த வீடியோக்கள் தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதில் ஒரு வீடியோ, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கோர்ட்டு அருகே கோவில் பாளையத்தை சேர்ந்த ரவுடி கோகுல் என்பவரை 4 பேர் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம்.

மற்றொரு வீடியோ, சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த சம்பவம் ஆகும். இந்த 2 வீடியோவையும் சேர்த்து தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பது போன்ற போலியாக வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியது தெரியவந்தது.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர் பீகாரை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி கமிஷனர் சரவணன் தலைமையில் தனிப்படையினர் பீகார் விரைந்தனர். அங்கு அவர்கள் முகாமிட்டு, பீகார் மாநில போலீசார் உதவியுடன் போலி வீடியோவை சமூக வலைத்தளத் தில் பதிவேற்றம் செய்த நபரை தேடி வருகிறார்கள்.

இது குறித்து தனிப்படை போலீசார் கூறும்போது, பீகாரை சேர்ந்த யுவராஜ் சிங் ராஜ்புத் என்ற பெயரில் சமூக வலைத் தளத்தில் வதந்தி வீடியோ வெளியாகி உள்ளது. அவரை பிடிக்க பீகாரில் முகாமிட்டு உள்ளோம். விரைவில் அவரை பிடித்து விடுவோம் என்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.