திருச்சி பிரபல மருத்துமனை 5 வது மாடியில் இருந்து குதித்த 19 வயது இளம் பெண் பலி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சோமரசம்பேட்டை அல்லித்துறை அடுத்த சாந்தாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பசாமியின் மகள் நிவேதா, இவர் நர்சிங் படித்து முடித்து விட்டு  திருச்சி வயலூர் ரோட்டில் ரத்னா மெடிக்கல் சென்டர் RMC ஹாஸ்பிடலில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.  இந்த மருத்துவமனையில் குழந்தை இல்லா தம்பதியருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

7.3.23 அன்று மருத்துவமனையில் பணிபுரிந்து வரும்  நிவேதா என்கின்ற 19 வயது பெண் பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில்   5வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

Sri Kumaran Mini HAll Trichy

திருச்சி பிரபல மருத்துமனை 5 வது மாடியில் இருந்து குதித்து 19 வயது இளம் பெண் பலி !
திருச்சி பிரபல மருத்துமனை 5 வது மாடியில் இருந்து குதித்து 19 வயது இளம் பெண் பலி !

Flats in Trichy for Sale

தகவல் அறிந்த பெற்றோர் சம்பவம் நடந்த  மருத்துவமனைக்கு வந்தனர்  நிர்வாகத்திடம்  பெண்ணின் இறப்பை பற்றி கேட்டனர் ஆனால் நிர்வாகமோ சரியான பதில் அளிக்கவில்லை  இதனால் மனம் உடைந்து பெற்றோர், உறவினர் மற்றும் ஊர் மக்கள் மருத்துவமனையை   இரவு எட்டு முப்பது மணி அளவில் ஹாஸ்பிடல் எதிரில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் .

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்திலே எப்படி இறந்தார், இறப்புக்கான காரணம் தெரியம் வேண்டும் , எங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள், அவளுடைய சாவில் மர்மம் உள்ளது, மெடிக்கல் சென்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பெற்றோர் என்று பொதுமக்கள் சாலைமறியலில் அந்த பகுதி போக்குவரத்து பெரிதளவு பதியப்பட்டது.

சாலை மறியலை ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதற்காக   விரைந்து வந்த சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அன்பு மற்றும் உதவிஆணையர் ராஜு சாலை  மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தி நீண்ட நேரத்திற்கு பிறகு இரவு 10:15 மணிக்கு கூட்டத்தை அப்புறப்படுத்தினார்கள். அரசு மருத்துமனை காவல்துறையினர் வழக்கு பதிந்து இந்த பெண்ணின் இறப்பு காதல்விவகாரமா?  கொலையா ?? தற்கொலையா?  வேறு ஏதானும் காரணம் உள்ளதா ? என்று  விசாரணை நடைபெற்று வருகிறது…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.