மணல் கடத்தலை தடுத்த துறையூர் ஆர்.ஐ. மீது கொலை வெறி தாக்குதல் – மீட்ட பொதுமக்கள் – வீடியோ

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மணல் கடத்தலை தடுத்த துறையூர் ஆர்.ஐ. மீது கொலை வெறி தாக்குதல் – மீட்ட பொதுமக்கள் – வீடியோ

துறையூர் அருகே மணல் கடத்தலை பிடிக்க சென்ற வருவாய் துறை அதிகாரி மேல் கொலை வெறி தாக்குதல் ! திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு!

Sri Kumaran Mini HAll Trichy

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரபாகரன் வயது 36 இவரது கட்டுப்பாட்டில் துறையூர் உட்பட பதினாறு கிராமங்கள் செயல்பட்டு வருகின்றன.

JCP
JCP

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்நிலையில் நேற்று 27.05.2023  இரவு 10 மணியளவில் துறையூர் தாசில்தார் வனஜாவுக்கு நரசிங்கபுரம் கிராமத்தில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் வனஜா அப்பகுதியின் வருவாய் ஆய்வாளரான பிரபாகனுக்கு தகவல் அளித்தார்.

வீடியோ லிங் 

 

Flats in Trichy for Sale

உடனடியாக சம்பவ இடமான பச்சமலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஜே சிபி இயந்திரத்தைக் கொண்டு மண் அள்ளிக் கொண்டிருந்ததைக் கண்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் , உடனடியாகத் தடுத்து ஜேசிபி எந்திரத்தின் சாவியை எடுத்துக் கொண்டு திரும்புகையில் , திமுகவைச் சேர்ந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ்வரன் , ஜேசிபி உரிமையாளரான தனபால் மற்றும் மணி ஆகிய 3 பேரும் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவர்
ஊராட்சி மன்ற தலைவர் – மகேஸ்வரன்

சாலையில் கிடந்தகருங்கல்லை எடுத்து பிரபாகரனின் தலை , கை, கால் உள்ளிட்டவற்றில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் மணி என்பவர் பிரபாகரனின் கழுத்தின் பின்புறம் மிகவும் கொடூரமாக தனது வாயால் கடித்துள்ளார்.இத்தகைய கொடூரத் தாக்குதலில் நிலை குலைந்து போன பிரபாகரனை ஊர்ப் பொதுமக்கள் மீட்டு பெருமாள்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆர்.ஐ. மருத்துவமனையில்
ஆர்.ஐ. மருத்துவமனையில்

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது பற்றி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்வரன் மற்றும் ஜேசிபி உரிமையாளர் தனபால் அவரது நண்பர் மணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து , தலைமறைவான 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோஸ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.