அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இசைஞானி ஆசியுடன் துவங்கிய ‘சாரா’

0

திருச்சியில் அடகு நகையை விற்க

இசைஞானி ஆசியுடன் துவங்கிய ‘சாரா’

Viswa Dream World தயாரிப்பில், பரபர திரில்லர் திரைப்படம் சாரா இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. !!

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படம் “சாரா” பூஜையுடன் இனிதே துவங்கியது !!

Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் – குருசாமி G தயாரிப்பில், இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள  பூஜையுடன் இனிதே துவங்கியது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இவ்விழாவினில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.இந்நிகழ்வினில்

இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பேசியதாவது… இந்தப் பூஜையை விளக்கேற்றி துவக்கி வைத்த என் தந்தைக்கு நன்றி. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன் நன்றி.

இசைஞானி ஆசியுடன் துவங்கிய 'சாரா' (2)
இசைஞானி ஆசியுடன் துவங்கிய ‘சாரா’ (2)

கதாநாயகன் விஜய்விஷ்வா பேசியதாவது .. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். சாரா திரைப்படத்தின் பூஜைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. கார்த்திக்ராஜாவின் இசையில் நான் நடிக்கவுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. விஸ்வா டிரீம் வோர்ல்ட் கம்பெனியினர் வழங்கும் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து முதன்முறையாக நடிக்கிறேன் மேலும் சாக்‌ஷி, பொன்வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர், ஆகியோருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கதாநாயகி சாக்‌ஷி பேசியதாவது..
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். என்னை இந்த திரைப்படத்திற்கு தேர்வு செய்த இயக்குநருக்கு என் முதல் நன்றி. கார்த்திக்ராஜா சார், இளையராஜா சார், மற்றும் வந்திருக்கும் அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு புதுமையான அனுபவம் தரும் படமாக இருக்கும்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…
சாரா திரைப்படத்தின் துவக்க விழாவில் இருப்பது மகிழ்ச்சி. இசை மாமேதை மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா, இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, இந்தப் படம் மூலமாக விஜய் விஷ்வா, ஒரு நல்ல திரைப்படம் தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது, அவருக்கும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

மிரட்டல் செல்வா ஸ்டன்ட் மாஸ்டர் …
அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வணக்கம், நடிகை சாக்‌ஷியும் நானும் இணையும் இரண்டாவது படம் இதுவாகும் . இந்த திரைப்படத்தில் அதிக சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அனைவரும் இந்தப் படத்திற்காக காத்திருக்கிறோம். இந்த திரைப்படம் ஒரு சஸ்பன்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகவுள்ளது, இந்த திரைப்படம் நன்றாக வர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி

இசைஞானி ஆசியுடன் துவங்கிய 'சாரா' (2)
இசைஞானி ஆசியுடன் துவங்கிய ‘சாரா’ (2)

இயக்குநர் ரஜித் கண்ணா பேசியதாவது…
ஒரு இக்கட்டான சூழலில், தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனையா ? அல்லது தனக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நண்பனையா ? நாயகி யாரை காப்பாற்றுகிறாள் என்பதே இப்படம். கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் இப்படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, பல சண்டைக்காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும். விஜய் விஷ்வா நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் யோகிபாபு, ரோபோசங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். கண்டிப்பாக நல்ல அனுபவம் தரும் படமாக இப்படம் இருக்கும், நீங்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிக்கிறார் ஆக்சன் அவதாரத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு ஒரு திருப்புமுனை படமாக இப்படம் இருக்கும், இப்படத்தில் நாயகனாக விஜய் விஷ்வா நடிக்கிறார். யோகிபாபு ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், பொன்வண்ணன், அம்பிகா, ரேகா நாயர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

தொழில் நுட்ப குழு விபரம்

தயாரிப்பு – Viswa Dream World
தயாரிப்பாளர் – R விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் – குருசாமி G
நடிகர்கள் – சாக்‌ஷி அகர்வால், விஜய்விஷ்வா, பொன்வண்ணன், அம்பிகா, யோகிபாபு ரோபோ சங்கர்.
இயக்குநர் – ராஜித் கண்ணா
ஒளிப்பதிவு – J. லக்ஷ்மன்
எடிட்டர் – SP அஹமத்.
இசை – கார்த்திக் ராஜா
கலை இயக்குனர் – சுரேஷ் கல்லெறி
சண்டை பயிற்சியாளர் – மிரட்டல் செல்வா
பாடலாசிரியர் – சினேகன், அருண் பாரதி
தயாரிப்பு மேலாளர் – சுந்தரம் சிவம்
புகைப்படம் – சுரேஷ்
ஆடை வடிவமைப்பு – ராஜன்
மேக்கப் – கரி சுல்தான்
மக்கள் தொடர்பு – A ராஜா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.