“என் வாழ்க்கைல நடந்த உண்மைச் சம்பவம்” –‘சீரன்’ தயாரிப்பாளர் பேச்சு!

0

“சீரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Netco Studios சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ் M அவர்களின் அஷோசியேட் இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா நடிப்பில் சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் ‘சீரன்’. மேலும் ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டை ஓட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சீரன்
சீரன்

இந்நிகழ்வினில்..

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் பேசியதாவது..,
இந்தப் படம் எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, எங்களுக்கு ஆதரவு அளிக்க வந்துள்ள அனைவருக்கும் நன்றி. தயாரிப்பிலும் நடிப்பிலும் இந்தப் படத்தில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்த சோனியா அகர்வால், நரேன் மற்றும் இனியா அவர்களுக்கு நன்றி. மேலும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றி. இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த நண்பர். அவருடன் இணைந்து பல படங்கள் செய்ய நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் சில வாக்குவாதம் இருக்கும் ஆனால் அது படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அவரிடம் பல விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளருக்கு 1 ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர் இயக்குநர், அதே போல் ஒளிப்பதிவாளர் மிகவும் சிறந்த காட்சிகளை இந்தப் படத்தில் உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி. பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நான் என் சிறு வயதில் பார்த்த விஷயங்களை இந்தப் படத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சீரன் (2)
சீரன் (2)

இயக்குநர் துரை K முருகன் பேசியதாவது..,
நான் இந்த இடத்தில் இருப்பதற்குக் காரணம் என் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக், அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படத்தின் EP அழகு கார்த்தி தான் தயாரிப்பளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அவருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தப் படம் தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அவர் சொன்னதைக் கேட்ட போது, என் சிறு வயதில் என் தாத்தா, எத்தனை ஜாதிவெறியுடன் இருந்துள்ளார் என்ற ஞாபகமும் மிகப்பெரும் கோபமும் வந்தது. அதனை அழுத்தமாக இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்தப் படத்தில் இனியா மற்றும் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுக்குக் கண்டிப்பாக இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பெயர் வாங்கி தரும். கதாநாயகன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் ஒட்டு மொத்த உணர்வையும் கொடுத்து, சமூக கருத்தையும் பதிவு செய்யும். இந்தப் படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.

நடிகை இனியா பேசியதாவது,
இந்தப் படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எடை கூட்டிக் குறைத்து நடித்துள்ளேன். நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் படத்தில் பாடல் காட்சிகளில் நடிக்கும் போது சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன். நான் இவரைப் பார்த்து சில தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ள உள்ளேன். இயக்குநர் மிகவும் பக்குவம் நிறைந்தவர், அவருக்குத் தேவையானது என்ன என்பதில் தெளிவாக இருந்தார். பல பிரச்சனை நடந்தாலும் எந்த விஷயங்களும் படத்தைப் பாதிக்காதவாறு இந்தப் படத்தை அருமையாக உருவாக்கியுள்ளார். அதே போல ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். மேலும் இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

சீரன் (2)
சீரன் (2)

நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது..,
இந்தப் படம் ஒரு சமூக அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு இதன் கதை மிகவும் பிடித்திருந்தது. கோவில் படத்திற்குப் பிறகுக் கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தயாரிப்பாளர் மிகவும் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார். மேலும் அவரது கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறும். இயக்குநர் ஃபாஸ்டாக வேலை செய்வார் ஆனால் கச்சிதமாக காட்சிகளை உருவாக்கிவிடுவார். படத்தை நன்றாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மிகவும் பொறுமைசாலி அருமையாகக் காட்சியைப் படமாக்கியுள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது.., இது ஒரு உண்மைக் கதை. இப்படியெல்லாம் நடக்குமா என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. இப்படி ஒரு முயற்சியைச் செய்ததற்குப் பாராட்ட வேண்டும். முதல் படம் போலவே இல்லை அழகாக நடித்துள்ளார் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக். இயக்குநர் பல போராட்டங்களுக்கு பிறகு இந்தப் படத்தைக் கொண்டு வந்துள்ளார். தனக்கு காட்சி எப்படி வேண்டுமோ அது வரும் வரை விடமாட்டார், கடுமையான உழைப்பாளி, இன்னும் பெரிய இடத்திற்குச் செல்வார். நீங்கள் தான் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். யாரையும் இந்த படம் ஏமாற்றாது, அனைவருக்கும் ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் நன்றி.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.