சாக் ஷி அகர்வாலுக்கு ‘எல்லாமே’ சாதகமா இருக்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சாக் ஷி அகர்வாலுக்கு ‘எல்லாமே’ சாதகமா இருக்கு!

சாக் ஷி அகர்வால் (2)
சாக் ஷி அகர்வால் (2)

 

Sri Kumaran Mini HAll Trichy

சொந்த ஊரு பெங்களூரு என்றாலும் தமிழ் சினிமா ஏரியாவான கோலிவுட்டில் எண்ட்ரி ஆனார் சாக் ஷி அகர்வால். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். முகம் ஓரளவு பரிட்சயமான நேரத்தில் விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் போய் வெளியே வந்ததும் ஹீரோயின் சான்ஸ் தேடி வந்தது.

வில்லி, அக்கா -தங்கச்சி வேசம், கேரக்டர் ரோல் மட்டுமல்ல, கவர்ச்சி, சூப்பர் கவர்ச்சிக்கும் “நான் செட்டாவேன்” என புரூஃப் பண்ணுவதற்காக, செம கிளாமராக ஃபோட்டோ ஷாப் இல்லாம, ஒரிஜினல் போட்டோ ஷூட் நடத்தி செட் செட்டாக ரிலீஸ் பண்ணிக் கொண்டிருக்கார் சாக் ஷி. இதற்கு உடனடியாக கைமேல் பலன் கிடைத்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

ரஜித் கண்ணா டைரக்ட் பண்ணி வரும் த்ரில்லர் படமான ‘சாரா’ கன்னட சினிமா மியூசிக் டைரக்டர் அஜ்னீஷ் லோக்நாத் தயாரிக்கும் படம், உபேந்திரா படத்தில் வெயிட்டான கிளாமர் தூக்கலான ரோல், இது போக தமிழில் ஏழெட்டுப் படங்கள் என செம ஃபார்மில் ஸ்டெடியாக போய்க் கொண்டிருக்கிறார் சாக் ஷி. லேட்டஸ்டாக சாக் ஷிக்கு கேரளவில தீபாவளி பம்பர் பரிசு கிடைத்து திக்குமுக்காடிப் போயிருக்கார்.

அட லாட்டரியில இல்லீங்க, கேரள சினிமாவில்ங்க. மம்முட்டியின் தங்கை மகன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கிராமத்துப் பெண் கேரக்டரில் கமிட்டாகி விட்டார். கேரளத்து பெண்களின் முண்டு கட்டி, மலையாள சினிமாவிலும் முண்டா தட்ட ஆரம்பித்திருக்கும் சாக் ஷி அகர்வாலுக்கு இந்தி சான்ஸும் கதவைத் தட்ட ஆரம்பிச்சிருக்காம்.

சாக் ஷி யின் சில பல டெக்னிக்ஸும்அவருக்கு சாதகவே இருக்கு. “ஆமா சாக் ஷி, ஹாலிவுட் படத்தில் நடிக்க வைக்கிறேன்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு பார்ட்டி அமெரிக்காவுக்கெல்லாம் கூட்டிக்கிட்டுப் போனாரே? அது என்னாச்சும்மா? ஏதோ கேட்கணும்னு தோணுச்சு. அம்புட்டுத்தேன். . ‌‌

– மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.