திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திய ஸ்வீடன் மாணவர்கள்… திருச்சி அரசுப்பள்ளியின் அசத்தல் முயற்சி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள், பண்பாடு,கலாச்சாரம் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ள சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்.
இன்று திருச்சி வந்திருந்தனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு  வருகை தந்த சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பள்ளி ,
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறுகாம்பூர் கடைவீதியில்  இருந்து பள்ளி வரை தமிழக பாராம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளித்து வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்க நெறிமுறைகள் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என நேரில் பார்வையிட்டனர்.

முதலில் குத்து விளக்கேற்றி பள்ளியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் குடிலில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து   பள்ளியில் நடைபெறும்  வழிபாட்டுக் கூட்டம்,தமிழ் தாய் வாழ்த்து  கொடியேற்றுதல்,நாட்டு நடப்புகள்,பொது அறிவு,ஆசிரியர்களின் அறிவுரைகள் தேசிய கீதம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நமது கலாச்சார கலை நிகழ்ச்சிகளான சிலம்பம் கரகம், நாட்டுப்புறப்பாட்டு ,தற்காப்புக் கலை  உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர்ந்து சுவீடன் நாட்டு  மாணவர்கள் சுவீடன் நாட்டு தேசியக்கொடி பள்ளிக் கொடி மற்றும் நினைவு பரிசுகளை சிறுகாம்பூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள். மாணவர்கள் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என சுவீடன்  பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு சிலாகித்தனர்.

இதை தொடர்ந்து நமது அரசு பள்ளி மாணவர்கள் சுடவீன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை பரிமாற்றம் செய்து கொண்டு கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் சிறுகாம்பூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் சிறப்புரை ஆற்றினார். உதவி தலைமை ஆசிரியர் தேன்மொழி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சுவீடன் நாட்டு பள்ளி முதல்வர் பிரிட்ரெக் லண்ட் மற்றும் துணை முதல்வர் கரிண் ஹோல்சன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஸ்வீடன் நாட்டு  பள்ளியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் சந்தானம், சங்கரி ஆகியோர்  மாணவர்களிடம்  சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக  ஆசிரியர் தீபா நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிகளை உதவி தலைமை ஆசிரியர் ஹீமேரா பானு தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறுகாம்பூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் சுவீடன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்வீடன் மாணவர்கள் தமிழக மாணவர்களின் திறனை புகழ்ந்தனர். மேலும் கல்விமுறை மற்றும் கலைத்திறமைகளை கண்டு ரசித்தனர்..

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.