காலில் விழுந்து கெஞ்சிய பயணி; விடாமல் தாக்கிய போலீஸ்காரர் – வேலூர் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி!

0

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இருந்து நள்ளிரவு 1 மணி ஆகியும், திருவண்ணாமலைக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இல்லாததால், குடும்பத்துடன் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். நீண்ட நேரமாகப் பேருந்துகள் வராததால், அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் பயணிகள் சிலர் கோபப்பட்டு வாக்குவாதம் செய்திருக்கின்றனர். இரவு நேர கண்காணிப்புப் பணியில் இருந்த வேலூர் வடக்குக் காவல் நிலையக் காவலர் விஜயகுமார் என்பவர் பயணிகளை அமைதிப்படுத்த மிரட்டல் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
காலில் விழுந்து கெஞ்சிய பயணி; விடாமல் தாக்கிய போலீஸ்காரர் – வேலூர் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி!

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணி மீது போலீஸ்காரர் ஒருவர் தாக்குதல் நடத்தியிருக்கிறார். பேருந்துக்குள் புகுந்தும் அடித்து, கீழே இழுத்து வர முயன்றிருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

2 dhanalakshmi joseph

காவலர் தாக்கும் காட்சிகள்

4 bismi svs

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இருந்து நள்ளிரவு 1 மணி ஆகியும், திருவண்ணாமலைக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இல்லாததால், குடும்பத்துடன் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். நீண்ட நேரமாகப் பேருந்துகள் வராததால், அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் பயணிகள் சிலர் கோபப்பட்டு வாக்குவாதம் செய்திருக்கின்றனர். இரவு நேர கண்காணிப்புப் பணியில் இருந்த வேலூர் வடக்குக் காவல் நிலையக் காவலர் விஜயகுமார் என்பவர் பயணிகளை அமைதிப்படுத்த மிரட்டல் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

அப்போது, நடுத்தர வயதுடைய ஆண் பயணி ஒருவர் அமைதியாகாமல் சத்தம் போட்டபடியே இருந்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த காவலர் விஜயகுமார், அனைவரது மத்தியிலும் அந்த பயணியின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். காவல் நிலையம் அழைத்துசெல்ல சட்டையைப் பிடித்தும் இழுத்திருக்கிறார். அங்குக் கூடியிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது அந்தக் காவலர், ‘‘அவர் போதையில இருக்கிறார். யூனிஃபார்மில் இருக்கிற என்னைப் பார்த்து ‘யோவ்’ என்கிறார்’’ என்றவரிடம், ‘‘நான் போதையில இருக்கிறதை நீங்கப் பார்த்திங்களா..? நான் ‘யோவ்’ என்று சொல்லவே கிடையாது’’ என்று அடிவாங்கிய பயணியும் வாதம் செய்தார். இதையடுத்து, அங்கு வரவழைக்கப்பட்ட சிறப்புப் பேருந்தில் திருவண்ணாமலை பயணிகள் ஏறினர்.அடிவாங்கிய பயணியும் ஊருக்குச்செல்ல பேருந்தில் ஏறினார்.

அதைப் பார்த்ததும் காவலர் விஜயகுமார் பேருந்துக்குள் புகுந்தும் அடித்து, கீழே இழுத்து வர முயன்றிருக்கிறார். அப்போது, ‘அய்யா, நான் வீட்டுக்குப் போகணும்’ என்று சொல்லி, காவலரின் காலில் விழுந்தார் அந்த பயணி. அதன்பிறகும் காவலரின் போக்கு எல்லை மீறியதால், சக பயணிகள் கூட்டமாகச்சேர்ந்து, காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சூழல் மாறியதை உணர்ந்த காவலர் விஜயகுமார் அமைதியாகி பயணியை விட்டுச் சென்றார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.