என்ன தம்பி அவரை நம்ம கட்சியில சேர்த்திரலாமா ?
என்ன தம்பி அவரை நம்ம கட்சியில சேர்த்திரலாமா ?
“மணப்பாறையில் அதிமுக பிரமுகர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு காண்டிராக்ட் எடுத்து வேலை செய்தால் நம்ம கட்சிகாரன்லாம் என்ன ஆகிறது?” என கழக உடன்பிறப்புகள் எழுதி போட்ட கடுதாசி, அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் பலர் முன்னிலையில் வாசிக்கப் பட்டிருக்கிறது.
உடன்பிறப்புக்கள் கைகாட்டும் அந்த அதிமுக பிரதிநிதி மணப்பாறை வெங்கடாச்சலம் ஒரு வகையில், திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு உறவுக்காரராம். இந்த பாசத்தில்தான் காண்டிராக்ட் கை மாறியதாக சொல்கிறார்கள்.
இந்த பின்னணியை தெரிந்து கொண்டுதான் வெங்கடாச்சலத்தை முக்கிய பொறுப்பிலிருந்து கழட்டி விட்டாராம் அதிமுகவின் மாவட்ட செயலர் ப.குமார். இதில் விசேசம் என்னவென்றால், தன்னை தொடர்புபடுத்தி எழுதப்பட்ட அந்த கடிதத்தை வாசித்ததே அமைச்சர் கே.என்.நேருதானாம்.
ஆனாலும், அசராத அவர் உதயநிதி ஸ்டாலின் பக்கம் திரும்பி, ”என்ன தம்பி அவரை நம்ம கட்சியில சேர்த்திரலாமா?” எனக் கேட்டு சீரியஸ் மேட்டரை சிரிப்பலையாக்கியிருக்கிறார்.