அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மில்லியன் டாலர்ஸுடன் கைகோர்க்கும் ஆர்.ஜே.பாலாஜி !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’! மில்லியன் டாலர்ஸுடன் கைகோர்க்கும் ஆர்.ஜே.பாலாஜி !

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ்த் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

HARINI JEWELLERS TRICHY

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர் 3’ என பெயரிடப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் தயாரிப்பாளர்களும், ஃபேமிலி என்டர்டெய்னர் ஜானரிலான திரைப்படங்களை தொடர்ந்து அளித்து வரும் நடிகர் ஆர். ஜே. பாலாஜியும் இணைந்திருப்பதால், இவர்களின் கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

மேலும் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்த நாளை ( ஜூன் 20) முன்னிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் பிரத்யேக போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.